
இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் கடந்த மாதம் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது. இதில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந்தேதி வரை மட்டுமே ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
வரும் 16-ந்தேதி முதல் திருப்பதியில் அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் இப்படம் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுமென தேவஸ்தானம் அறிவித்தது.
இந்த நிலையில் ஆன்லைனில் தொடர்ந்து இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வரும் 17-ந்தேதி திருமலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மீண்டும் ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் இலவச தரிசனத்திற்கு பக்தர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 30,609 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,359 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.