
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 16 ஆயிரத்து 12 பேர் மட்டுமே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள னர்.
நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மாநில அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இன்று அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டது.
இதுபோல வழிபாட்டு மையங்களுக்கு கூடுதல் பக்தர்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும் கூடுதல் பக்தர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பொங்கல் விழா, கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் கோவிலுக்கு 200 பக்தர்கள் மட்டுமே செல்லலாம் எனக்கூறப்பட்டது. இப்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 1500 பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இக்கோவிலில் பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் சிறுமிகளின் தாலப்பொலி, சிறுவர்களின் குத்தியோட்டம் ஆகியவை விமர்சியையாக நடைபெறும். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சிகளையும் கொரோனா விதிகளை கடைபிடித்து நடத்தி கொள்ளலாம் எனக் கூறப் பட்டு உள்ளது.
பொங்கல் வழிபாடு 17-ந் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் விதிகளுக்கு உட்பட்டு பெண்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு நடந்த பொங்கல் விழாக்களில் லட்சக்கணக்கில் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு உள்ளனர். அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்...வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆலத்தூர் காருடைய அய்யனார்- வீரனார் கோவில்