என் மலர்
வழிபாடு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை உற்சவர் சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்திலும், இரவு அஸ்தமானகிரி விமான வாகனத்திலும் உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதற்காக தேர் மராமத்து மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர் செல்ல ஏதுவாக மாடவீதிகளில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 15-ந்தேதி நடக்கிறது. 17-ந் தேதி இரவில் தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Next Story