என் மலர்

  வழிபாடு

  தெப்போற்சவம்
  X
  தெப்போற்சவம்

  தெப்போற்சவம் 2-வது நாள்: ருக்மணி, சத்தியபாமா, பார்த்தசாரதிசாமி திருச்சி வாகனத்தில் உலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் தெப்போற்சவத்தின் 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்ளே வலம் வந்து அருள்பாலிக்கிறார்கள்.
  திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை ருக்மணி, சத்தியபாமா சமேத பார்த்தசாரதிசாமி கோவில் உள்ளேயே திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள்பாலித்தனர்.

  முன்னதாக காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

  தெப்போற்சவத்தின் 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்ளே வலம் வந்து அருள்பாலிக்கிறார்கள்.

  விழாவில் கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, உதவி அதிகாரி ரவிக்குமார்ரெட்டி, கோவில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.சீனிவாச தீட்சிதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×