
இந்த ஆண்டிற்கான தெப்பத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சங்கர லிங்க சுவாமி மற்றும் பிரியா விடை, கோமதிஅம்பாள் ஆவுடைப்பொய்கை தெப்பத்திற்கு எதிரேயுள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை ரவிபட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி அம்பாள் இருவரும் தெப்பத் தேருக்கு எழுந்தருளினர்.
இதையடுத்து தெப்பத் தேரோட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. சுவாமி, அம்பாள் தெப்பத்திற்குள் 11 முறை தேரில் சுற்றி வந்தனர்.
இதனைக் காண சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தெப்பத்தைச் சுற்றிலும் நின்று சுவாமி, அம்பாளை தரிசித்தனர்.
இதில் அறநிலையத்துறை இணைஆணையர் அன்பு மணி, துணை ஆணையர் அருணாசலம் உதவி ஆணையர் சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி. ஜாகிர் உசேன் ஆலோசனைப்படி டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
முன்னதாக இந்த ஆண்டு நல்லமழை பெய்ததால் தெப்பத்தில் தண்ணீர் நிறைந்து பாசி படிந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் அய்யப்ப சேவா சங்கம் மற்றும் செந்திலாண்டவன் திருச்சபை உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.