என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 5-ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.
இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணியளவில் சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
*7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் உருகுசட்ட சேவை நடக்கிறது. பின்னர் 8.30 மணியளவில் சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் (திங்கள்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக 4-ந் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பகல் மற்றும் இரவில் பல்வேறு வாகன உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான முதல் நாள் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சாமி அமரவைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து மலை சுற்றுப்பாதையில் பக்தியுடன் இழுத்து சென்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி, தெய்வானை மணாளனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
நிகழ்ச்சியில் கதர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மாதவன், சிவஞானம், செந்தில்குமார், வஜ்ஜிரவேல், ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், மேலாளர் நித்தியானந்தம் மற்றும் உபயதாரர்கள், விழாக்குழுவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாள் தேர் நேற்று மலை சுற்றுப்பாதையில் சுற்றி வந்து, துண்டுகரை பகுதியை வந்தடைந்தது. இன்று (சனிக்கிழமை) இரண்டாம் நாள் தேர் துண்டுகரையில் இருந்து மாலை புறப்பட்டு மலை சுற்றுப்பாதையில் உள்ள சோம்நாதபுரம் என்ற பகுதியை சென்றடைய உள்ளது. மீண்டும் அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை மூன்றாம் நாள் தேர் புறப்பட்டு பெருமாள் குப்பம் பகுதியை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து 14-ந்தேதி புறப்பட்டு, கோவில் அருகில் உள்ள நிலையை வந்து சேருகிறது.
தேர் இரவு தங்கும் இடங்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், பக்தி சொற்பொழிவுகள், நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 15-ந்் தேதி காலை வேடர்பரி உற்சவமும், வள்ளியம்மை திருக்கல்யாணமும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 16-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினரும், உபயதாரர்களும், விழாக்குழுவினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

எஸ்.வி.மங்கலத்தில் மாசி மக திருவிழாவையொட்டி ஆத்மநாயகி அம்பாள்- ருத்ரகோடீசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி.மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆத்மநாயகி உடனுறை ருத்ர கோடீசுவரர் கோவில் உள்ளது. இது திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம், பிரான்மலை வகை 5 கோவில்களில் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
அது போல் இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும், காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களில் சாமி திருவீதி உலா வந்தார்.
அதனை தொடர்ந்து 5-ம் நாள் திருவிழாவான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கிராமத்தலைவர் காந்தி அம்பலம் தலைமை தாங்கினார். கோவில் கண்காணிப்பாளர் கேசவன், பேஸ்கர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எஸ்.வி மங்கலம் தெய்வசிகாமணி சிவா பட்டர் தலைமையில் சுப்ரமணிய சிவாச்சாரியார் உள்பட 9 பேர் கொண்ட குருக்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். காலை 10.10 மணிக்கு ருத்ரகோடீசுவரர் ஆத்மநாயகி அம்பாளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர். அதனை தொடர்ந்து பரம்பரை மண்டகப்படியாளரான பரம்பரை கணக்கு ஸ்தானிகர் காளமேகம் பிள்ளை-ரமணி அம்மாள் குடும்பத்தினர் சார்பில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) சமணர்களுக்கு சாப விமோசனம் வழங்கிய கழுவன் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மகத்தில் உலகப்புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஜந்து திருக்கோவில்கள் மற்றும் சதுர்வேத மங்களம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

ஆலத்தூரையும் அதனை சுற்றியுள்ள மக்களுடனும் இரண்டற கலந்த காவல் தெய்வமாக இக்கோவில் அய்யனாரும், வீரனாரும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் கிராமம் பட்டுக்கோட்டையில் இருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ள அழகிய பாரம்பரியம் மாறாத கிராமம். ஆலத்தூர் என்றாலே அனைவருக்கும் தெரிந்த ஒரே பெயர் காருடைய அய்யனார்- வீரனார் ஆலயம் தான்.
ஆலத்தூரையும் அதனை சுற்றியுள்ள மக்களுடனும் இரண்டற கலந்த காவல் தெய்வமாக இக்கோவில் அய்யனாரும், வீரனாரும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த கோவிலில் காருடைய அய்யனார் மூலவராக வீற்றிருக்க அடுத்து வீரனாரும் பரிவார தெய்வங்களாக நொண்டிவீரன், முன்னோடியன், மாப்பிள்ளைவீரன், அகோரவீரப்பத்திரன், விசாலாட்சி அம்மன், காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு வீற்றிருக்கின்றார்கள். இக்கோவிலில் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் ஒரு வேளை உச்சிகால அபிஷேகம், மற்றும் படையல்கள் நடைபெறும்.
வேண்டுதல் நிைறவேற நடக்கும் நிகழ்ச்சிகளே இங்கு ஒரு பெரும் திருவிழா போன்றே நடக்கும். இதனால் வாரத்தில் 3 நாட்களும் இக்கோவில் திருவிழா போல காட்சியளிக்கும்.
மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வங்களாக அய்யனாரும், வீரனாரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். மக்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப குதிரை உபயம், படித்துரை உபயம், அன்னதான உபயம் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்கிறார்கள். பொருளதார மேம்பாடு அடைய, குழந்தை பாக்கியம் பெற, குடும்ப பிரச்சினை சுமுமாக தீர வேண்டி இங்கு மக்கள் வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிய தலமாக இக்கோவில் உள்ளது.
சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று இங்கு வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. அன்று காவடி எடுத்தல் விழா நடைபெறும். விழாவின் 2-வது நாளில் காலபைரவருக்கு அக்னி கொப்பரை எடுத்தல் விழா நடைபெறும்.
இறுதி நாளில் தேர் திருவிழா நடைபெறும். தேர் புறப்படும் முன்பாக செம்மறி ஆடு தேருக்கு பலியிடப்படுகிறது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் தற்போது ஆலத்தூர் மற்றும் ஏனைய கிராம மக்களின் உதவியுடனும், வெளிநாடு வாழ் மக்களின் உதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடக்கிறது.
இந்த கோவிலில் 1939-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 1979-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பின் 43 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காருடைய அய்யனார்-வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 6-ந் தேதி காலை விநாயகர் வழிபாடும் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 7-ந்தேதி காலை சாந்தி ஹோமம், மாலை கிராம சாந்தியும் நடைபெற்றது. 8-ந்தேதி காலை மூர்த்தி ஹோமம், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
9-ந்தேதி காலை 2-ம் கால யாக பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று 5-ம் கால யாகபூஜை நடந்தது. இன்று காலை 6 மணிக்கு 6-ம்கால யாக பூஜையும் 8.30மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான மகா குடமுழுக்கும், காலை 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது.
கிராம மக்களின் குலதெய்வமாக ஆலத்தூரில் வீற்றிருந்து காவல் காக்கும் கண்கண்ட தெய்வமாக காருடைய அய்யனார் அருள்பாலிக்கிறார். இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடக்க இருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சித்ரா பவுர்ணமி நாளில் விழா காணும் காருடைய அய்யனார்
ஆலத்தூரில் காருடைய அய்யனார் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வீரனார் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். பக்தர்கள் காவடி, கொப்பரை எடுத்து வந்து அய்யனாரை வழிபடுவார்கள். 3-வது நாள் தேரோட்டம் நடைபெறும். இக்கோவில் தேர் வடம் 90 ஆண்டுகள் பழமையான இரும்பு சங்கிலியால் ஆனதாகும். கோவிலை சுற்றி அய்யனார் தேர் வலம் வரும். இக்கோவிலின் முகப்பின் இருபுறமும் 10 அடி, 15 அடி உயரத்துக்கு மேற்பட்ட குதிரை சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நேர்த்திக்கடன் விழா இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் நகரின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மறுநாள் பூத்தேர் ஊர்வலம், கடந்த 2ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தினந்தோறும் அம்மனின் மின்தேர் ஊர்வலம் பல்வேறு மண்டகபடிதாரர்கள் சார்பில் நடைபெற்றது. நேற்று பொடிக்கார வெள்ளாளர் மண்டகபடி சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
மாலையில் கோட்டை மாரியம்மன் மின்தேர் பவனி நடைபெற்றது. வெண்பட்டு உடுத்தி சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நேர்த்திக்கடன் விழா இன்று காலையில் நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு பூக்குழி தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
அங்கு கோவில் பூசாரி முதலில் பூக்குழி இறங்கினார். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குழந்தைகளை சுமந்தபடியும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கிய காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதனால் இன்று கோட்டை மாரியம்மன் கோவில் வளாகமே பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இன்று மாலையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அய்யனார் காவல் தெய்வம் ஆதலால் ஊர் எல்லையில் கோவில் கொண்டிருப்பார். இவர் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார்.
அய்யனார் காவல் தெய்வம் என்றும், கிராம தேவன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு சாத்தன் மற்றும் சாஸ்தா ஆகிய பெயர்களும் உள்ளன. நகரங்களிலும் இவருக்கு கோவில்கள் உண்டு. காரணம், இன்றுள்ள நகரங்களும் ஒருகாலத்தில் கிராமங்களாக இருந்தவையே.
நமது தமிழ்நாட்டில் அநேகமாக எல்லா ஊர்களிலும் அய்யனார் கோவில்கள் உள்ளன. இவர் காவல் தெய்வம் ஆதலால் ஊர் எல்லையில் கோவில் கொண்டிருப்பார். இவர் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார். வயல்களில் விளையும் பயிர்களை காப்பவரும் இவரே. இவருக்கு பாவாடை ராயன், கருப்பணசாமி, வீரபத்திரன், இடும்பன் மற்றும் வீரன் ஆகிய துணைவர்கள் உண்டு.
இவர்களும் அய்யனார் கோவிலில் வீற்றிருப்பர். பிடாரி என்று அழைக்கப்படும் பீடாபகாரி என்ற தேவதையையும் இவரது கோவிலில் காணலாம்.கிராமத்திலுள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றால், கோவிலின் வெளியே, திறந்த வெளியில் பெரிய அளவிலான, பல வண்ணங்கள் தீட்டப்பட்ட அய்யனார் சிலையை காணலாம். இவர் குதிரையின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார். பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரில் உள்ள காருடைய அய்யனார் கோவிலும் பிரசித்திப்பெற்ற அய்யனார் கோவில்களுள் ஒன்றாகும்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 5 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி மஹாசண்டி ஹோமம், சுமங்கலி பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, வஸ்த்ராஹூதி, பூர்ணாஹூதியும், கடங்கள் புறப்பாடும் நடைபெற்றன.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 5 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தேவி ஆவாஹனம், சப்தசதி, பாராயணம், யோகினி, பைரவர்பலி ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல்மதியம் 1 மணி வரை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவிஆவாஹனம் நடைபெற்றது. மேலும், மஹாசண்டி ஹோமம், சுமங்கலி பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, வஸ்த்ராஹூதி, பூர்ணாஹூதியும், கடங்கள் புறப்பாடும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தங்ககவசம் அணிந்த உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. 9-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளன்று நம்பெருமாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணியளவில் வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.
9-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 1-ந்தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் காலையிலும் இரவிலுமாக உற்சவர் சன்னதியில் இருந்து திருவாச்சி மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
கொரோனா வைரஸ் பரவலால் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் தவிர்க்கப்பட்டது. இதே சமயம் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

சைவர்களுக்கு சிவாயநம என்கிற ஐந்தெழுத்து மிகவும் முக்கியமாகும். அதுபோல் ஐந்து என்ற எண் பெருமை இந்த கோவிலில் பல வகைகளிலும் வெளிப்படுகிறது.

அதன்படி 5 பிரகாரங்கள் ஆதி காலத்தில் இருந்தே உள்ளது. இதில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் முகம்மதியர்கள் ஆட்சியின் போது ஒரு பிரகாரம் பஞ்சவர்ண திருச்சுற்று அழிந்து போனதாக இங்குள்ள 28 ஆகமக்கோவில் தெலுங்கு கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே தற்போது தேரோடும் பிரகாரம், கைலாயபிரகாரம், வன்னியடி பிரகாரம், அறுபத்து மூவர் பிரகாரம் என நான்கு மட்டுமே இருக்கிறது. இந்த கோவிலை மலையாக பாவித்து, இன்றும் பவுர்ணமி நாளில் கிரிவலம் வரும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
ஐந்தெழுத்து உபதேசம்
இங்கு உயிர் நீத்தவர்களை இறைவன் பழமலைநாதர் தன் மடி மீது கிடத்தி ஐந்தெழுத்து உபதேசம் செய்ய, பெரிய நாயகி முந்தானையால் வீசி முக்தி அளிப்பதாக கந்த புரணாத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார்.
5 கொடிமரங்கள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் அருகே ஒரு கொடிமரமும், வன்னி மர பிரகாரத்தில் 4 திசைகளிலும் 4 கொடிமரங்களும் அமைய பெற்றுள்ளது. மாசிமக பெருவிழாவின் போது இந்த 5 கொடி மரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று, 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் பழமலை நாதரைப் பாடியதாக பாடல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் இத்திருக்கோவிலுக்கு வந்திருக்கிறார் என்று திருவாதவூரர் புராணத்தில் குறிப்புள்ளது.
சிவப்பிரகாச சுவாமிகள்
இவர் தொண்ட மண்டலத்தில் காஞ்சீபுரத்தில் அவதரித்தவர். 34 நூற்களை இயற்றிய பெருமை உடையவர். திருமுதுகுன்றத்திற்கு வந்து பழமலைநாதரையும், பெரியநாயகியையும் வழிபட்டு பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகிம்மை நெடுங்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம், பெரிய நாயகியம்மை கட்டளை கலித்துறை ஆகிய 5 நூற்களையும் படைத்துள்ளார்.
ஞானக்கூத்தர்
கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பழமலைநாதர் மீது அளப்ரிய பற்றுக் கொண்டவர். பழமலைநாதர் வீற்றிருந்தருள் புரியும் இப்புண்ணிய பூமியில் மலம் நீர் கழிக்கக்கூடாது என ஊழின் எல்லைக்கு சென்று கடன்களை செய்தவர். அதனால் அவருக்கு சேப்பாக்கத்தில் காட்சி கொடுத்தார். இவர் தான் விருத்தாசலம் புராணத்தை 438 விருத்தப்பாக்களில் பாடியவர்.

காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று இரவு அன்ன வாகன உற்சவம் நடக்கிறது. நாளை இரவு சிம்ம வாகனம் உற்சவம் 13-ந் தேதி அனுமந்த வாகன உற்சவமும், 14-ந் தேதி கருட சேவையும், 15-ந் தேதி பெட்டதம்மன் அழைப்பும் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிர சித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 10 மணிக்கு கோவில் முன் பிரகாரம் பகுதியில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தேர்த்திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று இரவு அன்ன வாகன உற்சவம் நடக்கிறது. நாளை இரவு சிம்ம வாகனம் உற்சவம் 13-ந் தேதி அனுமந்த வாகன உற்சவமும், 14-ந் தேதி கருட சேவையும், 15-ந் தேதி பெட்டதம்மன் அழைப்பும் நடக்கிறது.
16-ந் தேதி சுவாமி அதிகாலை5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக அரங்கநாத பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
18-ந் தேதி பரிவேட்டை, 19-ந் தேதி தெப்போற்சவம், 20-ந் தேதி சந்தான சேவையும் நடைபெற உள்ளது.

சதுர்த்தி திதியானது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி. ‘சங்கட’ என்றால் ‘துன்பம்’, ‘ஹர’ என்றால் ‘அழித்தல்’. துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாவதோடு, தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுக்கு நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பவுர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் விசேஷம். வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும்.