search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "masi thiruvizha"

    • வென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதில் முக்கிய திருவிழாவான மாசி திரு விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    இதையொட்டி கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    கொடியேற்ற விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அனைத்து சமுதாய மக்களாலும் கொண்டா டப்படும் இத்திருவிழா 11 நாட்கள் நடை பெறுகிறது. நாள்தோறும் சுவாமி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நிறைவு நாளான 11-ம் திருநாளில் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து பூஞ்சப்பர காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடை பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    • மாசி திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா முக்கிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா நாளை (சனிக் கிழமை) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருப்பதால் தினமும் காலை, இரவு என சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற உள்ளது. மேலும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 5-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதில் சுவாமி,அம்பாள் ஆகிய இருதேர்கள் வடம் பிடித்து இழுக்கப் படுகின்றன. தினமும் வெவ்வேறு சமுதா யத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா,கோமதி கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா நேற்று முன்தினம் திரு முளைச்சாத்துடன்தொடங்கிய நிலையில் வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
    • 24-ந் தேதி காலை 11மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 2-வது ஸ்தலமான நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோத்ஸவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன்படி, இந்தாண்டிற் கான திரு விழா நேற்று முன்தினம் திரு முளைச்சாத்துடன்தொடங்கிய நிலையில் வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.

    திருவிழா கொடி யேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது. காலை 10.30மணிக்கு கொடி பட்டம் கோயில் வளாகத்தை சுற்றிவரப்பட்டு காலை 11,05மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன், கொடியேற்றி வைத்தார்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 9.10மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது.

    இதைப்போல் தினமும் மாலை 6 மணிக்கு பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ஹ வாகனம், ஹனுமந்தம், சேஷம், யானை, இந்திர விமானம், சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, குதிரை, வெற்றிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    திருவிழாவின் 5ம் திருவிழாவான 18ம் தேதி மாலை 6மணிக்கு எம்இடர் கடிவான் பெருமாள் கருட சேவையும், 8ம் திருவிழாவான 20ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5மணிக்குள் திருக்கல்யாணமும், 24ம் தேதி காலை 11மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். அர்ச்சகர்கள் ராஜ கோபாலன், சுந்தர்ராஜன், ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், உள்ப்பட பலர் கலந்து கொண்டனர்

    வீராணம் காட்டுவளவு பகுதியில் மூக்கர காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
    சேலம் வீராணம் காட்டுவளவு பகுதியில் பிரசித்தி பெற்ற மூக்கர காளியம்மன் கோவிலில் தற்போது மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கட்டளைதாரர்கள் சார்பாக அம்மனுக்கு தினசரி பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

    நேற்று 12-ம் நாள் உற்சவமாக அம்மனுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை அம்மனுக்கு 108 சீர்வரிசையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இன்று (புதன்கிழமை) சக்திக்கரகம், பூமிதித்தல், பொங்கல் வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன. நாளை (வியாழக்கிழமை) திருவிளக்கு பூஜையும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) சத்தாபரணம், 2-ந் தேதி அன்று ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    காரமடை கோவிலில் பரிவேட்டை உற்சவத்தையொட்டி வெள்ளை குதிரை வாகனத்தில் அரங்கநாதர் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசிமக தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகன உற்சவங்கள், கருடசேவை நடைபெற்றது. 17-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பு, 18-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அரங்கநாத பெருமாளின் அடியார்களான தாசர்கள் தெப்பக்குளத்தில் இருந்து தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி கையில் பிரம்புடன் ஓட்டமும், நடையுமாக வந்து கோவில் வளாகத்தில் பெருமாளுக்கு சமர்ப்பித்தனர். இது தண்ணீர் சேவையாகும்.

    மேலும் சில தாசர்கள் கையில் 1 அடி முதல் 6 அடி வரை உள்ள தீப்பந்தங்களை எடுத்து தாரை, தப்பட்டைகளுடன் தெப்பக்குளத்தில் இருந்து பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் மற்றும் நான்கு ரத வீதிகளில் கோவிலுக்கு வந்தனர். இது பந்த சேவையாகும். பின்னர் 10.30 மணிக்கு அரங்கநாத பெருமாள் மன்னர் அலங்காரத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் அமர்ந்து பரிவேட்டை மைதானத்திற்கு வந்தார். சிறப்பு பூஜைகள், வாணவேடிக்கையுடன் பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது.

    திருமலை மன்னர் வேடுபரி நிகழ்ச்சியை தொடர்ந்து அரங்கநாத பெருமாள் கோவிலை வந்தடைந்தார். குதிரை வாகன உற்சவத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை இரவை பகலாக்கும் வகையில் இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

    கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதி பக்தர்களின் வசதிக்காக 5 இடங்களில் தற்காலிக போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டு கோபி, சத்தி, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காரமடை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. செயல் அலுவலர் பார்த்திபன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.

    கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டு பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜகோபால், சஞ்சய் காந்தி, பிரபு, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், காலசந்தி பூஜை நடந்தது.

    விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மண்டபங்களில் தங்கியிருந்து வழிபட்டனர். காலையில் மண்டபங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், கிரிப்பிரகாரம் வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

    மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை நடந்தது. இரவில் கழுகாசலமூர்த்தி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தரிசனம் நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. காலை 8.50 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    விழாவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 5-ம் நாளான 18-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் கருடசேவை நடக்கிறது. 9-ம் நாளான 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    10-ம் நாளான 23-ந்தேதி (சனிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. 11-ம் நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நம்மாழ்வார், ஆச்சாரியர்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 25-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.
    நாகநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடங்கியது
    திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே நந்தி கோவில் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் இன்று(திங்கட்கிழமை) கற்பக விருட்சம், காமதேனு வாகனத்திலும், நாளை(செவ்வாய்க்கிழமை) பூத வாகனம், கமல வாகனத்திலும், 13-ந் தேதி கைலாச பர்வதம், அன்ன வாகனத்திலும், 14-ந் தேதி இடப வாகனத்திலும், 15-ந் தேதி யானை வாகனம், பூப் பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறுகிறது. 16-ந்தேதி நந்தி வாகனம், சிம்ம வாகனத்திலும், 17-ந் தேதி குதிரை வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 18-ந் தேதி காலை 9.55 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 19-ந் தேதி மாசி மகத்தன்று காலை ஸ்ரீநடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

    அன்று இடப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். 20-ந் தேதி சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், அன்று இரவு விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்றதும், 108 வைணவ தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்வத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் வருவார்கள். அப்போது தெப்பக்குள படிக்கட்டிலும், குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தையொட்டி பெருமாள் தேவியருடன் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் தங்க கிரீடம் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொடி மரம் அருகே விஷ்ணு பூத பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் கருடன் படம் வரையப்பட்ட வெள்ளை நிற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு தர்ப்பை புல், மாவிலைகளாலும் வெண்பட்டு சுற்றப்பட்டு, பால், தயிர் திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்றைய தினம் இரவு சாமி திருவீதி புறப்பாடு நடந்தது.

    திருவிழாவில் 2-ம் நாள் முதல் 6-ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெறும். 6-ம் நாளான வருகிற 15-ந்தேதி இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும் நடைபெறும். 7-ம் நாளில் சாமி சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 8-ம் நாளில் சாமி திருவீதி புறப்பாடும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

    9-ம் நாளில் காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 11 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெறும். 10-ம் நாளான 19-ந்தேதி காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 10 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். 11-ம் நாளான 20-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து காலை 5.20 மணிக்கு திருக்கோவில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஐந்தாம் திருவிழாவான வருகிற 14-ந்தேதி மேலக்கோவிலில் (சிவன் கோவிலில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    ஏழாம் திருவிழாவான 16-ந்தேதி அன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் கும்ப லக்கனத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    எட்டாம் திருவிழாவான 17-ந்தேதி காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவிலில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து நண்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக்கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார். ஒன்பதாம் திருவிழாவான 18-ந்தேதி அன்று சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    பத்தாம் திருவிழாவான 19-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடக்கிறது.

    மறுநாள் (20-ந் தேதி) பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. விழா தொடர்ந்து 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் பாலாபிசேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பிலும்,2-ம் நாள் சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், 3-ம் நாள் தேவர் சமுதாயம், 4-ம் நாள் யாதவர் சமுதாயம், 5-ம் நாள் பட்டங்கட்டியார் சமுதாயம், 6-ம் நாள் அரிசன சமுதாயம், 7-ம் நாள் விஸ்வகர்மா சமுதாயம், 8-ம் நாள் செங்குந்த முதலியார் சமுதாயம், 9-ம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம், 10- நாள் திருவிழா நாடார் சமுதாயம், 11-ம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது.

    10ம் நாள் திருநாளான வருகிற 19-ந் தேதி காலை கீழப்பாவூர் சிவன்கோவில், பனையடிப்பட்டி, குறும்பலாப்பேரி, செட்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான 20-ந் தேதி கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பர காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. திருவிழாக்களின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் சிறப்பு சொற்பொழிவுகள்- இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. திருவிழாவிற்கான எற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, ராமாயணம் குறித்த தோல்பாவை கூத்து கதை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    ×