search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மூக்கர காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா
    X

    மூக்கர காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா

    வீராணம் காட்டுவளவு பகுதியில் மூக்கர காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
    சேலம் வீராணம் காட்டுவளவு பகுதியில் பிரசித்தி பெற்ற மூக்கர காளியம்மன் கோவிலில் தற்போது மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கட்டளைதாரர்கள் சார்பாக அம்மனுக்கு தினசரி பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

    நேற்று 12-ம் நாள் உற்சவமாக அம்மனுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை அம்மனுக்கு 108 சீர்வரிசையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இன்று (புதன்கிழமை) சக்திக்கரகம், பூமிதித்தல், பொங்கல் வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன. நாளை (வியாழக்கிழமை) திருவிளக்கு பூஜையும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) சத்தாபரணம், 2-ந் தேதி அன்று ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×