search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்ட திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்ட திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

    காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று இரவு அன்ன வாகன உற்சவம் நடக்கிறது. நாளை இரவு சிம்ம வாகனம் உற்சவம் 13-ந் தேதி அனுமந்த வாகன உற்சவமும், 14-ந் தேதி கருட சேவையும், 15-ந் தேதி பெட்டதம்மன் அழைப்பும் நடக்கிறது.
    கோவை மாவட்டத்தில் பிர சித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    காலை 10 மணிக்கு கோவில் முன் பிரகாரம் பகுதியில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தேர்த்திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு அன்ன வாகன உற்சவம் நடக்கிறது. நாளை இரவு சிம்ம வாகனம் உற்சவம் 13-ந் தேதி அனுமந்த வாகன உற்சவமும், 14-ந் தேதி கருட சேவையும், 15-ந் தேதி பெட்டதம்மன் அழைப்பும் நடக்கிறது.

    16-ந் தேதி சுவாமி அதிகாலை5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக அரங்கநாத பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    18-ந் தேதி பரிவேட்டை, 19-ந் தேதி தெப்போற்சவம், 20-ந் தேதி சந்தான சேவையும் நடைபெற உள்ளது.
    Next Story
    ×