search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.
    X
    புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.

    புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த திருவிழா 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி வியாழக்கிழமை புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.

    நேற்று மாலை பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கான திருமுழுக்கு வழங்குதல், மாலை 5 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    14-ந் தேதி கத்தோலிக்க சேவா சங்கம் சிறப்பிக்கும் பவளவிழா கொண்டாடும் திருப்பலியும், 17-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும். 18 -ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

    19-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.

    20-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குடும்பவிழாவான திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி.ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ.அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×