என் மலர்
- படத்திற்கு ’ரவுடி ஜனார்தனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடைசியாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 15வது படம் ரவி கிரன் கோலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் கிலிம்பஸ் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
கிங்டம் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு கை கொடுக்காத நிலையில் 'ரவுடி ஜனார்தனா' மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?
துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.
அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.
ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நாயகன் சௌந்தரராஜா, நாயகி தேவனந்தாவை திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்குவதற்காக மலைப்பகுதிக்கு செல்கிறார். அங்கு நாயகியுடன் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு, பணம் நகைகளை இந்த வீட்டில் மறைத்து வைத்துவிட்டு சில தினங்களில் வருவதாக சொல்லி நாயகி தனியே விட்டு செல்கிறார்.
இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் சௌந்தரராஜா வராமல் இருக்கிறார். இந்நிலையில் பாம்பு கடித்ததாக கூறி வீட்டுக்கு வரும் சந்தோஷ் தாமோதரன், நாயகி தேவனந்தாவை அடைய நினைக்கிறார். மேலும் சௌந்தரராஜா வீட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை தேடுகிறார்.
இறுதியில் சந்தோஷ் தாமோதரன் யார்? எதற்காக பணம் நகைகளை தேடுகிறார்? நாயகி தேவனந்தாவை அடைந்தாரா? சௌந்தரராஜா தேவானந்தாவை தேடி மீண்டும் வந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சௌந்தரராஜா, காதல், கோபம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு படம் ஆரம்பம் மற்றும் இறுதி காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் தேவனந்தா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை தைரியமாக செய்ததற்கு பாராட்டுக்கள். குறிப்பாக கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
சந்தோஷ் தாமோதரன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தேவனந்தாவை அடைய நினைப்பது, அவருக்காக ஏங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். அப்புகுட்டி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
இயக்கம்
மலைப்பகுதியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் குமார். ஒரு பெண்ணை அடைய நினைப்பவர்கள், அவர்களை அந்த பெண் எப்படி சமாளிக்கிறார் என்பதை திரை கதையாக கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரை கதையும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாததும் படத்திற்கு பலவீனம்.
இசை
வர்கீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலைப்பகுதிகளை அழகாக படம் வீட்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.
ரேட்டிங்- 2/5
- சிவகார்த்திகேயனின் 25வது படம்.
- முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஃபசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் நிலையில், அதற்கு போட்டியாக ஜன.10 வெளியாகிறது பராசக்தி.
சில மாதங்களுக்கு முன் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல ரசிகர் கூட்டத்தை இவர் உருவாக்கினார். இப்படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
கயாடு லோஹர் முதன் முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முகில்பெட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கயாடு லோஹர் இதயம் முரளி மற்றும் STR 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு இம்மார்டல் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தின் இசையில் சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் அவரது 25-வது படமான கிங்ஸ்டன் திரைப்படத்தை தொடர்ந்து இடிமுழக்கம், 13 மற்றும் பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இம்மார்ட்டல் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- இப்படத்தை விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குகிறார்.
- இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார்.
நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியீடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

- விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
- சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது
விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.
படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
- ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
- சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கினார்.
நடிப்பு, கார் ரேஸ், குடும்பம் என தன்னை ஒரு பிஸியான வாழ்க்கைக்குள்ளேயே வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது. அதனைத்தொடர்ந்து கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய குழுமூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார். அதில் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் இந்த கார் ரேஸிங் பயணம், ஆவணப்படமாக வெளிவர உள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
'Racing Isn't Acting' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அஜித் "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- 6 வளைகுடா நாடுகளில் தடை
- துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
அதன்படி இதுவரை துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ள காந்தாரா சாப்டர் 1-ன் சாதனையை முறியடித்துள்ளது.
- வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'அய்யோ காதலே' பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
- சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
- நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- அண்மையில் நடிகை நிதி அகர்வாலுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சமந்தா கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவும் சிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராஜாசாப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து கவலைகள் எழுப்புவதாக இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.








