என் மலர்
சினிமா செய்திகள்
- வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
- வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.
ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.
இதையடுத்து, வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோவை பார்த்த சிம்பு, தனது உதவியாளரை நேரில் அனுப்பி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார். உதவி பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு வழங்கியுள்ளார். வெங்கல் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசிய வடிவேலு அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டார் என பலரும் அவரை விமர்சித்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கல் ராவுக்கு அவர் உதவி செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது.
- 2 மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஜய்யின் 'கில்லி' படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது.
வசூல் சாதனை நிகழ்த்தியதால் அவர் நடித்துள்ள 'பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை' போன்ற வெற்றி படங்கள் மீண்டும் ரிலீசாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் 'பூவே உனக்காக' படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடக்கிறது. இரண்டு மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
'பூவே உனக்காக' படம் 1996-ல் வெளியானது. இதில் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார் ஜெய்கணேஷ், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விக்ரமன் இயக்கி இருந்தார்.
படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜான்வி கபூருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்.
- ‘கர்ணா’ படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.
இவரது தந்தை போனி கபூர் தமிழில் அஜித்குமார் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். ஜான்வி கபூருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம். இதற்காக கதை கேட்டு வந்தார்.

இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' தெலுங்கு படத்திலும், சூர்யா நாயகனாக நடிக்க தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராவதாக அறிவிக்கப்பட்ட 'கர்ணா' படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

'தேவாரா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். 'கர்ணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படத்தை கைவிட படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஜான்வி கபூருக்கு தமிழ் படத்தில் அறிமுகமாக இருந்த வாய்ப்பு கைநழுவி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
- வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.
இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.
2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார்.
அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் இன்று சென்னையில் நடந்தது.
படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார். நயன் தாரா படத்தின் நாயகனான ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்தார். விழாவில் பேசிய நயன் தாரா " நான் எந்த விழாவிலும் கலந்துக் கொள்ள விருப்பப்படுவதில்லை, ஆனால் இந்த விழாவிற்கு கலந்துக் கொள்ள காரணம் உண்டு. இந்த விழா எனக்கு ஒரு குடும்ப விழா போன்றது. அதற்கு காரணம் என்னுடைய இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். அவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும் , ஒரு சிறந்த மனிதன்" என கூறினார்.
இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.
- தயாரிப்பு நிறுவனம் தனது 2வது படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான படம் எண்ணித் துணிக.
நடிகர் ஜெய் இப்பொழுது எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜே.பி. தினேஷ் குமார் ஒளிப்பதிவு மற்றும் வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தை, Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், எண்ணித் துணிக படத்தை தொடர்ந்து Rain of Arrow Entertainment தயாரிப்பு நிறுவனம் தனது 2வது படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு தான் தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என போஸ்டருடன் பதிவிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
- இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.
மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.
தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.
அதைத்தொடர்ந்து 'பென்ஸ்' என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கூடுதல் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ்.
- சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் அடுத்ததாக 'வுல்ஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி இணையத்தில் பெருமளவு ரசிகர்களால் பகிரப்பட்டது.
தற்பொழுது படத்தின் முதல் பாடலான வெண்ணிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பிரபு தேவா மற்றும் அனுசுயா பரத்வாஜ் இணைந்து நடனமாடியுள்ளனர். இது ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை முகேன் ராவ் மற்றும் சரத் சந்தோஷ் இணைந்து பாடியுள்ளனர். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.
- பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.
புதுடெல்லி:
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) June 28, 2024
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து,… pic.twitter.com/J03SHZER6t
- விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க்.
- படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க். பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், ஜாக்கிசெராப், ஜெயபிரகாஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற ஜூலை மாதம்திரைக்கு வர இருக்கிறது. காஷ்மீர், மும்பை, சென்னையில் நடைபெறும் கதை இந்த படம்.
கொலைச் சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங் படத்தின் கதை.
படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
படத்தில் இருவரது கதாபாத்திரங்களும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளன.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் சன்னி லியோன் பேசியதாவது:-
இந்த படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர் விவேக் கண்ணன் நினைத்து என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
பிரியாமணியும் நானும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறோம்.
கவர்ச்சியாக என்னை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் என்னை பார்த்து ரசிப்பார்கள். ஜாக்கி செராப்புக்கு நான் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் கண்டிப்பாக மாறும். அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
படத்தின் டிரைலர் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் நிரம்பியுள்ளது. காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையென பல இடங்களில் ஒளிப்பதிவாளரான அருண் பத்மனாபன் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க கேஜே வெங்கடராமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைப்படம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2004- ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார்.
- வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "இங்க நான் தான் கிங்கு."
சின்னத்திரையில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் 2004- ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக கலக்கினார்.
அதைத்தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஒரு முழு நேர கதாநாயகனாக மாறினார். அதற்கடுத்த பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "இங்க நான் தான் கிங்கு." ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தில் சந்தானத்துடன் பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "இங்க நான் தான் கிங்கு" படத்தை கோபிரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான்,
- அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டார்.
இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை' சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார்.
அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஹேக்கட், ஸ்மார்ட்ஃபோன், லைன்ஸ், விஷ்லிஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹினா கான் அவருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயது ஆகும் ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர வெளியிட்ட அறிக்கையில் " எல்லாருக்கும் வணக்கம், நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன், நான் இந்த புற்று நோயை மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் வருவேன். இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும். உங்கள் ஆசிர்வாதமும், வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை எனக்காக பிரார்தனை செய்யுங்கள் " என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






