நயன்தாரா வெளியிட்ட `நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.
நயன்தாரா வெளியிட்ட  `நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Published on

2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார்.

அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் இன்று சென்னையில் நடந்தது.

படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா இவ்விழாவில் கலந்துக் கொண்டார். நயன் தாரா படத்தின் நாயகனான ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்தார். விழாவில் பேசிய நயன் தாரா " நான் எந்த விழாவிலும் கலந்துக் கொள்ள விருப்பப்படுவதில்லை, ஆனால் இந்த விழாவிற்கு கலந்துக் கொள்ள காரணம் உண்டு. இந்த விழா எனக்கு ஒரு குடும்ப விழா போன்றது. அதற்கு காரணம் என்னுடைய இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். அவரை எனக்கு 15 வருடங்களாக தெரியும் , ஒரு சிறந்த மனிதன்" என கூறினார்.

இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com