என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
    அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    சோழ வம்சம் தலைதூக்கியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர். இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.



    60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

    பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது.



    செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

    விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #AdithyaVarma #DhruvVikram
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க வர்மா என்ற பெயரில் பாலா தமிழில் இயக்கினார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் படம் திருப்தியாக இல்லை என்றும், முழு படத்தையும் கைவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படப்பிடிப்பை நடத்தப்போவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்தார்.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் துருவ் நடிக்க ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரானது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரிசய்யா இந்த படத்தை இயக்கினார். இந்தியிலும் கபீர்சிங் என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டது.


    கபீர் சிங் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆதித்ய வர்மா படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஆதித்யா வர்மா படத்தை படக்குழுவினர் கைவிட்டு விட்டதாகவும், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தையே தமிழில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

    இதனை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் போர்ச்சுக்கல் செல்கிறார்கள் என்று தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் `பிரேக்கிங் நியூஸ்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பானுஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார். #BreakingNews #Jai #BhanuSree
    ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படம் `பிரேக்கிங் நியூஸ்'. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இதுகுறித்து பானுஸ்ரீ கூறும்போது,

    "இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்."



    மேலும் பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம். இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது என்றார்.

    பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், அடுத்ததாக சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்த படத்திற்கு ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். #BreakingNews #Jai #BhanuSree

    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுவதாக சேரன் வேதனை தெரிவித்துள்ளார். #Cheran
    பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.


    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள். தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள் தானே.”

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Cheran #KamalHaasan #Seeman #MakkalNeethiMaiam #NaamThamizharKatchi

    இளையராஜா இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள் என்று படவிழாவில் ஷான் ரோல்டன் பேசினார். #MehandiCircus #Ilayaraja
    இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், சுவாதி திரிபாதி, விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விழா நடைபெற்றது.

    இதில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது: ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கு இன்ஸ்பிரே‌ஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.



    அவருடைய இசை தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரே‌ஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.

    இவ்வாறு அவர் கூறினார். #MehandiCircus #Ilayaraja

    சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
    கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.

    இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.



    பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.

    கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.



    காதல், ஆக்‌ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.



    ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji

    தமிழ், இந்தி என கைவசம் படங்கள் இருப்பினும், ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட்டில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #AishwaryaRai
    எந்திரன் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்தி, தமிழ் என கைவசம் படங்கள் இருப்பினும் ஐஸ்வர்யா ராயின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.



    இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளனர். 

    ஐஸ்வர்யா ஹாலிவுட் படங்களுக்காக ஒரு குழுவை அமைத்திருப்பதாகவும் அவர்கள் அங்கு ஐஸ்வர்யாவுக்கான வாய்ப்புகளை கவனித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நிவேதா பெத்துராஜுக்கு பிறகு ஹாலிவுட் செல்லும் நடிகையாக ஐஸ்வர்யா இருப்பார். #AishwaryaRai

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவரான மஞ்சிமா மோகன், ஜெயலலிதாக வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #ManjimaMohan #JayalalithaaBiopic
    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் தற்போது உடலை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

    இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- “சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிச்ச வி‌ஷயம். ஆனால், நான் ரொம்ப வெயிட் ஆகிட்டேன்னு பலரும் சொன்னாங்க. அதனால எடையை குறைக்க முடிவு பண்ணினேன். உணவுக் கட்டுப்பாடு எனக்குக் கஷ்டமாதான் இருக்கு... அதனால, பிடித்ததை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்குவேன்.



    ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை எனக்கும் பிடிக்கணும். அப்போதான், அவங்க வாழ்க்கையை என்னால சரியா பிரதிபலிக்க முடியும். கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படம்தான், மலையாளத்துல நான் நடிச்சிருக்கிற ‘ஜம் ஜம்.’ அதுல, கங்கனா பண்ணுன கேரக்டரை நடிக்கவே கஷ்டமா இருக்கு. அப்படி இருக்கிறப்போ, பயோபிக்ல நடிக்க டைம் ஆகும். மத்தபடி, எனக்கு ஜெயலலிதா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க கேரக்டர்ல நடிக்கச் சொன்னா, நான் தயார்’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManjimaMohan #JayalalithaaBiopic

    பிதாமகன், தனம், உயிர் உள்ளிட்ட பல படங்களை நடித்து பிரபலமான சங்கீதா மீது, அவரது தாய் பானுமதி புகார் கூறியுள்ளார். #Sangeetha
    பிதாமகன், தனம், உயிர், காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சங்கீதா. பாடகர் கிரிசை திருமணம் செய்து கொண்டுள்ளார். சங்கீதா மீது அவரது தாய் பானுமதி ‘வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார்’ என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இரு நாட்களுக்கு முன் கணவர் கிரிசுடன் ஆணையத்தில் ஆஜரானார். சங்கீதாவின் அம்மா பானுமதியின் புகார் குறித்து போலீசார் கூறியதாவது:-

    ‘எம்.ஜி.ஆரை வைத்து பத்து படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள் தான் பானுமதி. இவர் சென்னை வளசரவாக்கத்தில் இப்போது குடியிருக்கின்ற வீடு தன் மாமனார் வீட்டு வழியில் வந்த சொத்து. அந்த வீட்டில் இப்போது பானுமதி தரை தளத்திலும் சங்கீதா மாடியிலும் குடியிருக்கிறார்கள்.



    அந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை தன் அண்ணன், தம்பி அபகரித்துவிடுவார்கள் என்று சங்கீதாவுக்கு சந்தேகம். அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். பானுமதிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சமீபத்தில் தான் அவரது ஒரு மகன் இறந்தார். இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னால் அவர் எங்கேபோவார்? அதனால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் தந்திருக்கிறார்’.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பானுமதி தரப்பில் புகார் குறித்து கேட்டதற்கு புகாரில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லது நடக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் விரிவாக பேசலாம் என்றனர்.

    ஆணையத்தில் ஆஜரானது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு. ‘‘சினிமா தொடர்பான வி‌ஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட வி‌ஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்றார்.
    கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், இசன்யா, சாயாஜி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராக்கி தி ரிவெஞ்ச்’ படத்தின் விமர்சனம். #RockyTheRevenge
    இரட்டை நாய்களை ஒரு கும்பல் கடத்துகிறது. இதில் ஒரு நாய் தப்பித்து விபத்தில் சிக்குகிறது. இதை போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த், காப்பாற்றி தன்னுடன் வளர்க்கிறார். இதற்கு ராக்கி என்றும் பெயர் வைக்கிறார். ராக்கி மிகவும் புத்திசாலியாக இருப்பதால், பிரம்மானந்தம் மூலமாக போலீசில் துப்பறியும் நாய்கள் பயிற்சியில் சேர்க்கிறார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் சாயாஜி ஷிண்டேவின் கூட்டாளி சுந்தரை ஆயுதம் கடத்தியதாக ஸ்ரீகாந்த் கைது செய்கிறார். ஆனால் சுந்தர், எம்.எல்.ஏ. சாயாஜி மூலம் வெளியே வந்து விடுகிறார். மறுபடியும் சுந்தரை பிடிக்க முயற்சி செய்யும் போது ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். இதை ராக்கி நாய் பார்த்து விடுகிறது. 

    இறுதியில் ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை ராக்கி எப்படி பழி வாங்குகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். வழக்கம் போல் இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இசன்யாவிற்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சாயாஜி, போலீஸ் உயர் அதிகாரியாக வரும் நாசர் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள். 

    நாய் பழிவாங்குவதை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.சி.பொகாடியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதுபோல் ஒரு படத்தை பார்க்கும் அனுபவம் இருந்தாலும், ஒரு சில காட்சிகளை பார்க்கும் போது பழைய படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். 



    பப்பி லஹரி மற்றும் சரன் அர்ஜுனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. அஸ்மல் கானின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

    மொத்தத்தில் ‘ராக்கி’ கொஞ்சம் வீக்.
    உன்னைத்தேடி, வெற்றி கொடிகட்டு, திருட்டு பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா, இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறியிருக்கிறார். #Malavika
    அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்... பாடலில் நடனம் ஆடி பிரபலமானார். ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

    10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறியதாவது:-



    “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன்.

    மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.”

    இவ்வாறு மாளவிகா கூறினார்.
    ×