என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறியுள்ளார். #SriReddy
    பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவங்களை படத்தில் கொண்டு வருவதால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் உள்ளனர். படத்தை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் நடிகை சுப்ரியா, இயக்குனர் நந்தினிரெட்டி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதனை வரவேற்று ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-



    “எனது கனவுகள் இப்போது நிஜமாகி இருக்கிறது. சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை. ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். இதுவரை மோசமாக அழைக்கப்பட்டு வந்த நான் இந்த அறிவிப்பு மூலம் கதாநாயகி ஆகிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலியும், வேதனையும் இப்போது பறந்து விட்டது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
    மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் லிண்டா கார்டிலனி, பேட்ரிசியா வெலஸ்குவெஸ், ரேமண்ட் குரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவளின் சாபம்' படத்தின் விமர்சனம். #AvalinSaabam
    குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றி வருகிறார் லிண்டா கார்டிலனி. வழக்கமான தனது விசாரணைக்காக அந்த பகுதியில் இருக்கும் பேட்ரிசியா வெலஸ்குவெஸ் வீட்டிற்கு செல்கிறார். பேட்ரிசியாவுக்கு 2 குழந்தைகள். பேட்ரிசியா பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது குழந்தைகளை காட்ட மறுக்கிறாள்.

    இதையடுத்து குழந்தைகளை பேட்ரிசியா சித்தரவதை செய்வதாக நினைத்து லிண்டா தன்னுடன் வந்த அதிகாரிகள் உதவியுடன் குழந்தைகளை மீட்டு செல்கிறாள். ஆனால் அடுத்த நாளே அந்த குழந்தைகள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர்.



    இதுகுறித்து அந்த குழந்தைகளின் அம்மாவான பேட்ரிசியாவிடம் விசாரிக்க, தன் குழந்தைகளை அவள் தான் கொன்றிருப்பாள். அவள் உன் குழந்தைகளையும் கொன்று விடுவாள், இது அவளின் சாபம் என்று லிண்டாவிடம் கூறுகிறார்.

    கடைசியில், குழந்தைகளை கொன்று வரும் அந்த அவள் யார்? அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள்? அவளின் சாபம் என்ன? என்பதே மீதிக்கதை.

    குழந்தைகளுக்கான பாதுகாப்பு அதிகாரியாக லிண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். தனது குழந்தைகள் கடத்தப்படும் போதும், தனது குழந்தைகளை காப்பாற்றும் தருணத்திலும் நல்ல நடிப்பு. பேட்ரிக்கா, ரேமண்ட் குரூஸ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    தான் இறக்கும் தறுவாயில் சாபம் வாங்கிய ஒரு பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த கதையை இயக்கியிருக்கிறார் மைக்கேல் சாவ்ஸ். படம் திகில் காட்சிகளுடன் நகர்வது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

    ஜோசப் பிசாராவின் பின்னணி இசையும், மைக்கேல் பர்கீஸின் ஒளிப்பதிவும் திகிலை கூட்டியிருக்கின்றன.

    மொத்தத்தில் `அவளின் சாபம்' தொடரும். #AvalinSaabam #AvalinSaabamReview #LindaCardellini #RaymondCruz #PatriciaVelásquez

    கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடைசி நாளில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். #Jyothika #Revathi
    ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் கல்யாண் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகி இருக்கும் படத்தில் ஜோதிகாவுடன் ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

    ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Jyothika #Revathi #Suriya

    திரையுலகில் 25 வருடங்களை கடந்த இயக்குநர் ஷங்கரை கவுரவிக்கும் விதமாக பிரபல இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். #Shankar25 #Mysskin
    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது படங்கள் மூலமாக தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் இவரது படங்கள் வணிக ரீதியிலும் பெரிதாக பேசப்படும்.

    இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஷங்கர் 25 என்ற நிகழ்ச்சியை ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடினர்.



    இந்த நிலையில், ஷங்கருடன் நட்புடன் இருக்கும் இயக்குநர்கள் பலரும் இணைந்து ஷங்கரை பாராட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷங்கரை கவுரவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் தவிர மற்ற அனைவரும் எஸ் 25 என்று எழுதப்பட்டிருந்த நீல நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Shankar #Shankar25 #Mysskin

    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

    `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

    `புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `100' படத்தின் முன்னோட்டம். #100TheFilm #Atharvaa #Hansika
    ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `100'.

    இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு - ரூபன், கலை - உமேஷ் ஜே.குமார், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன் & அனுஷ்யா ஸ்வாமி, பாடல்கள் - விவேக், ஒலி வடிவமைப்பு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர், ஆடை வடிவமைப்பு - சாரா விஜயகுமார், தயாரிப்பு - காவியா வேணுகோபால், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன்.



    100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரம், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது.

    இந்த படம் மூலம் தான் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நடிகை ஹன்சிகா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். #100TheFilm #Atharvaa #Hansika

    100 படத்தின் டீசர்:

    கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `யோகி டா' படத்திற்கு `லூசிபர்' பட பிரபலம் தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். #YogiDa #Dhansika
    தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது.

    ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `லூசிபர்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    கவுதம் கிருஷ்ணா - ஹிமேஷ் பாலா இணைந்து இந்த படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர். #YogiDa #Dhansika #DeepakDev

    போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் நிலையில், கீர்த்தியும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். #KeerthySuresh #JhanviKapoor
    தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.

    அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். 

    இந்த நிலையில் கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KeerthySuresh #JhanviKapoor

    சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். #DhanusuRasiNeyargalae #HarishKalyan
    `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார். 
    `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. 

    இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டு நாயகிகளில் ஒரு நாயகியாக பாலிவுட்டின் ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார்.


    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.

    ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RheaChakraborty

    நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu
    வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.

    தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா - வைபவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

    சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #VenkatPrabhu

    நந்தன் சுப்பராயன் இயக்கத்தில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள `மயூரன்' படத்தின் முன்னோட்டம். #Mayuran
    பி.எஃப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டூடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் `மயூரன்'. 

    மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். இதில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பரமேஷ்வர், இசை - ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் - குகை மா.புகழேந்தி, படத்தொகுப்பு - அஸ்வின், கலை -  எம்.பிரகாஷ், 
    ஸ்டன்ட் - டான் அசோக், நடனம் - ஜாய்மதி, தயாரிப்பு - கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன்.



    படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,

    சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

    மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.

    சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்
    படம் தான் மயூரன். 

    படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார். #Mayuran

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்கள். 

    ‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.



    இப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக ‘தர்பார்’ படத்தில் இடம் பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அதுபோல இந்த படத்துக்கும் பல வகையான நடிப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறாராம் ரஜினி. #Darbar #Rajinikanth #Nayanthara

    ×