என் மலர்
சினிமா செய்திகள்
நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu
வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.
தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
#BigtrickBaddie Director @vp_offl in #ShvedhProductionNo2@Nitinsathyaa@shvedhgroup@actor_vaibhav@SGCharles2@vanibhojanoffl#Poorna@shamna_kasim#EswariRao@ArrolCorelli@madeditor@teamaimprpic.twitter.com/JZJuwn2S1Q
— Shvedh (@shvedhgroup) April 22, 2019
சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #VenkatPrabhu
நந்தன் சுப்பராயன் இயக்கத்தில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள `மயூரன்' படத்தின் முன்னோட்டம். #Mayuran
பி.எஃப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டூடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் `மயூரன்'.
மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். இதில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - பரமேஷ்வர், இசை - ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் - குகை மா.புகழேந்தி, படத்தொகுப்பு - அஸ்வின், கலை - எம்.பிரகாஷ்,
ஸ்டன்ட் - டான் அசோக், நடனம் - ஜாய்மதி, தயாரிப்பு - கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன்.

படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,
சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.
மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.
சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்
படம் தான் மயூரன்.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார். #Mayuran
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. #Darbar #Rajinikanth
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்கள்.
‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.

இப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக ‘தர்பார்’ படத்தில் இடம் பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அதுபோல இந்த படத்துக்கும் பல வகையான நடிப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறாராம் ரஜினி. #Darbar #Rajinikanth #Nayanthara
லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence
ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டு வந்தனர்.
இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
This is very important “Note” to my Friends and Fans👇 pic.twitter.com/S7J6J5Tz0k
— Raghava Lawrence (@offl_Lawrence) April 21, 2019
ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரேன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.
ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம். இவ்வாறு கூறியிருக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence
எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்ஷன் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Raangi #Trisha
திரிஷா ’கடந்த ஆண்டு, தமிழில் ‘96’, மலையாளத்தில் ‘ஹே ஜூட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமானவை” என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற அவர் ஆசை, ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. அதற்குப் பிறகு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்த படத்தை, ‘எங்கேயும் எப்போதும்‘, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவிருக்கிறார். ‘ராங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஆக்ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவிர, சிம்ரனுடன் இணைந்து மற்றொரு அட்வென்சர் படத்தில் நடிக்கிறார், திரிஷா. சுமந்த் ராதாகிருஷணன் இயக்கவிருக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து எனப் பல்வேறு இடங்களில் நடக்கிறது. #Raangi #Trisha #Anirudh
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக தியேட்டர் பிரச்சனையே காரணமாக கூறப்படுகிறது. #MrLocal #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென மிஸ்டர்.லோக்கல் மே 17 அன்று வெளியாகும் என்று இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்கிறபோது குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் வரை படத்தை ஓட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் காஞ்சனா 3 படம் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 450 திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட முடியாது.

அதோடு ஏப்ரல் 26 அன்று மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற ஆங்கிலப் படமும் வெளியாக இருக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் அவை 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1100 திரையரங்குகள். இவற்றால் மிஸ்டர்.லோக்கல் படத்துக்கு முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தேதி மாற்றம்” என்று கூறுகின்றனர். #MrLocal #Sivakarthikeyan
‘மார்க்கோனி மித்தாய்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் விஜய் சேதுபதியை படப்பிடிப்பில் சந்தித்த மலையாள தயாரிப்பாளர் ஜோசப் அவரை பாராட்டி கருத்து பதிவு செய்துள்ளார். #VijaySethupathi #MarconiMathai
விஜய் சேதுபதி, ‘சைரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். ‘மார்க்கோனி மித்தாய்’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: எடப்பள்ளியில் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என சொன்னவுடன் அங்கு செல்வது என்று முடிவு செய்தோம். அங்கு சென்றவுடன், படக்குழுவைச் சேர்ந்த பலரும் எங்கள் கதாசிரியர் ஜான் பாலிடம் சென்று பேசினார்கள். விஜய் சேதுபதி என்னிடம் வந்தார். நான் உடனே காரிலிருந்து இறங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்து வரவேற்றார்.

பிறகு பக்கத்தில் சென்று அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த ஜானிடம் பேச ஆரம்பித்தார். அவர் பேசிய விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சிஷ்யன் தன் குருவுக்கு முன் பேசுவதைப் போல இருந்தது. விஜய் சேதுபதி மனித வடிவில் ஒரு தேவதை என லெனின் பாரதி சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால், இன்று, குருத்து ஞாயிறன்று நான் ஒரு தேவதையைப் பார்த்தேன். இவ்வாறு ஜோசப் கூறியுள்ளார். #VijaySethupathi #MarconiMathai
இலங்கையில் இன்று 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு கொஞ்சம் முன்னரே தான் அங்கிருந்து புறப்பட்டதாக ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #SriLankaBlasts #RadikaaSarathkumar
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் திரண்டு இருந்த நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் அங்குள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது.
OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.
— Radikaa Sarathkumar (@realradikaa) April 21, 2019
இந்த குண்டுவெடிப்பில் சுமார் 129 பேர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா சரத்குமார், குண்டுவெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு கிளம்பியதன் மூலம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.
இதுகுறித்து ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #SriLankaBlasts #RadikaaSarathkumar
நார்தன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் சிம்பு மற்றும் கவுதம் இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #STR45 #GauthamKarthik
`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கன்னடத்தில் `மஃப்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய நார்தன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
We're Absolutely Thrilled to be Teaming up with, 🌟#STR🌟
— Studio Green (@StudioGreen2) April 21, 2019
for the First Time 😍
A Mega Budget Action Thriller Starring #STR 💪and @Gautham_Karthik 😎
Directed by the Super Talented #Narthan 👍
✍️ @madhankarky#STR45pic.twitter.com/G1zZiST0an
அதிக பெருட்செலவில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மதன் கார்க்கி இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள `தேவராட்டம்' படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #STR45 #STR #GauthamKarthik #Narthan
அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப் கதை சொல்வதில் அட்லி கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். #Thalapathy63 #Vijay #JackieShroff
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- அட்லி துறுதுறுப்பான இயக்குநராக இருக்கிறார். அவர் கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர்.
ஒரு கதையில் நம்ம பகுதி ஹீரோயிசமா, வில்லத்தனமா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரு கதையில் நின்று விளையாட என்ன இருக்கிறது என்று மட்டும்தான் யோசிப்பேன். அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப் பேசுவார்கள்.

படத்தில் கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக நடிக்கிறேன். பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வரும் பகுதி அது. சென்னையில் வெயில் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thalapathy63 #Vijay #JackieShroff
மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வரும் `சண்டி முனி' படத்தின் முன்னோட்டம். #SandiMuni #Natraj #ManishaYadav #YogiBabu
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `சண்டி முனி'.
நட்ராஜ் கதாநாயகனாகவும், மனிஷா யாதவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி, மேட்டூர் சேகர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - செந்தில் ராஜகோபால், இசை - ஏ.கே.ரிஷால் சாய், பாடல்கள் - வ.கருப்பன், கலை - சி.முத்துவேல், நடனம் - ராதிகா லாரன்ஸ் சிவா, சண்டைப்பயிற்சி - சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு - புவன், தயாரிப்பு நிர்வாகம் - முருகன் குமார், தயாரிப்பு மேற்பார்வை - என்.ஆர்.குமார், தயாரிப்பு - டி.சிவராம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மில்கா செல்வகுமார்.

படம் பற்றி இயக்குனர் பேசும் கூறியதாவது,
இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் குடும்ப படமாக சண்டிமுனி உருவாகுகிறது.
ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரமும் படத்தின் கதையாக உருவாகிறது என்றார். #SandiMuni #Natraj #ManishaYadav #YogiBabu
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
`பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.

மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #Darbar #KSRavikumar #HVinoth #KarthikSubbaraj






