என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வரும் `சண்டி முனி' படத்தின் முன்னோட்டம். #SandiMuni #Natraj #ManishaYadav #YogiBabu
    சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `சண்டி முனி'. 

    நட்ராஜ் கதாநாயகனாகவும், மனிஷா யாதவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி, மேட்டூர் சேகர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - செந்தில் ராஜகோபால், இசை - ஏ.கே.ரிஷால் சாய், பாடல்கள் - வ.கருப்பன், கலை - சி.முத்துவேல், நடனம் - ராதிகா லாரன்ஸ் சிவா, சண்டைப்பயிற்சி - சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு - புவன், தயாரிப்பு நிர்வாகம் - முருகன் குமார், தயாரிப்பு மேற்பார்வை - என்.ஆர்.குமார், தயாரிப்பு - டி.சிவராம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மில்கா செல்வகுமார்.



    படம் பற்றி இயக்குனர் பேசும் கூறியதாவது,

    இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ்  சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் குடும்ப படமாக சண்டிமுனி உருவாகுகிறது.

    ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரமும் படத்தின் கதையாக உருவாகிறது என்றார். #SandiMuni #Natraj #ManishaYadav #YogiBabu 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
    `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

    மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.



    மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #Darbar #KSRavikumar #HVinoth #KarthikSubbaraj

    சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படமும் மோதும் என்று எதிர்பார்த்த நிலையில், சிந்துபாத் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #MrLocal #Sindhubaath
    சு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை முன்னதாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. இறுதிக்கட்ட பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதையடுத்து ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சிந்துபாத் படத்தை மே 3-ந் தேதி ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வன்சன் மூவிஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. #MrLocal #Sindhubaath #Sivakarthikeyan #VijaySethupathi

    ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் சைபர் கிரைம் கலந்த திரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Irumbuthirai2 #Vishal
    விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.

    தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.



    விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார். #Irumbuthirai2 #Vishal #YuvanShankarRaja

    கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் - திரிஷா இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Siddharth #Trisha
    சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் தற்போது, இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இருந்தனர்.

    இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. ராதிகா ஆப்தே, தபு நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. கடந்த 3-ந் தேதி சீனாவில் இந்த படம் ‘பியானே பிளேயர்’ என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியது.



    இந்த நிலையில், அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Andhadhun #Siddharth #Trisha

    விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, தேவ், சார்லி, பூஜா தேவாரியா, பெய்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் விமர்சனம். #VellaiPookal #VellaiPookalReview
    விவேக் சிக்கலான வழக்குகளை திறமையாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கும் காவல் அதிகாரி. முக்கியமாக குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலுக்குள் நுழைந்து ஒவ்வொரு வழக்கையும் கண்டுபிடிக்கிறார்.

    அமெரிக்கா சென்ற அவருடைய மகன் அங்கே அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்வதால், அவருடனான பேச்சுவார்த்தை நிறுத்திவிடுகிறார். 



    இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் விவேக், தனது நண்பரின் வற்புறுத்தலால் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு தான் வசிக்கும் தெருவில் நடக்கும் மர்மமான சம்பவங்களை விசாரிக்க தொடங்குகிறார். அந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார்.

    கடைசியில் அந்த கொலையாளி யார்? அவர் கொலைகள் செய்வதற்கான காரணம் என்ன? அதனை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    காமெடியில் இருந்து சீரியசான கதாபாத்திரத்தில் விவேக், கதையின் நாயகனாக படத்தை தாங்குகிறார். விசாரணை காட்சிகளிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வ காட்சிகளிலும் அனுபவ நடிப்பு தெரிகிறது. 

    விவேக்குக்கு கிடைக்கும் அமெரிக்க நண்பராக சார்லி, விவேக் மகனாக தேவ், அவரது மனைவியாக பெய்ஜ் ஹெண்டர்சன், தேவ் தோழியாக பூஜா தேவரியா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.



    தமிழ்நாட்டு அதிகாரி அமெரிக்காவுக்கு சென்று விசாரிப்பது என்பது சில படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், திரைக்கதை புதிதாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்த விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கடைசியில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் வித்தியாசமான அமெரிக்காவை பார்க்க முடிகிறது. ராம்கோபால் கிருஷ்ண ராஜின் பின்னணி இசையும், கேஎல்.பிரவீனின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகிறது.

    மொத்தத்தில் `வெள்ளைப்பூக்கள்' பூக்கட்டும். #VellaiPookal #VellaiPookalReview #Vivekh

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `கென்னடி கிளப்' படக்குழுவின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #KennadiClub #Sasikumar
    `ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கே 13' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #K13 #Arulnidhi
    அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இந்த படத்தை தயாரித்துள்ளனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath

    ஒருமுறை தன்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவிய போது தான் அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர கஷ்டப்பட்டதாக கூறினார். #LakshmiMenon
    லட்சுமி மேனன் சினிமாவில் தனக்கு விழுந்த இடைவெளி பற்றி அளித்துள்ள பேட்டி:

    என்ன டான்ஸ் பக்கம் சென்று விட்டீர்கள்?

    டான்ஸ் என்றால் எனக்கு உயிர் என்று கூட சொல்லலாம். ஏன்னா, மூன்று வயதில் இருந்து நான் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறேன். கிடைத்துள்ள இந்த இடைவெளியில் குச்சுப்புடி நடனத்தில் டிப்ளாமோ படித்து வருகிறேன். கூடவே, சோசியாலஜி டிகிரியை தனியாரில் படித்து வருகிறேன். ஏற்கனவே பரத நாட்டியத்துக்கு ஒரு கோர்ஸ் படித்தேன். குச்சுப்புடி டான்சில் எனக்கு இது 2-வது கோர்ஸ்.

    அடுத்து?

    `யங் மங் சங்’ படம் முடிஞ்சு ரொம்பநாள் ஆகிவிட்டது. அதனால், சீக்கிரமே ரிலீசாகும் என்று நினைக்கிறேன். அடுத்து, 2 தமிழ்ப் படத்துல நடிக்க கதை கேட்டு வைத்துள்ளேன். முடிவானதும் சொல்கிறேன்.



    இந்த இடைவெளி உங்கள் மனதை பாதித்ததா?

    நான் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த இடைவெளியை சந்தோ‌ஷமாக கழிக்கிறேன். வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை... அது எனக்குப் புரியும்.

    ரசிகர்கள் ஆதரவு?

    ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால், பிரேக், பிரச்சினைகள்... எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோ‌ஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோ‌ஷமா வெச்சுக்கணும்... அவ்ளோதான். என்றார். #LakshmiMenon #YangMangChang

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படங்களின் ரிலீஸ் தேதிகளை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் மாற்றி புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #MrLocal #Devarattam
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவராட்டம் படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


    அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MrLocal #Devarattam #Sivakarthikeyan #GauthamKarthik

    இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்க, நாயகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kalaiyarasan #AravindAkash
    நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.


    இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். #Kalaiyarasan #AravindAkash #SureshMari #PaRanjith

    எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Raangi #Trisha
    ‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

    ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.


    திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷாவின் அக்காவாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. #Raangi #Trisha #MSaravanan #ARMurugadoss

    ×