என் மலர்

  சினிமா

  ரஜினியின் அடுத்த 3 படங்கள்
  X

  ரஜினியின் அடுத்த 3 படங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
  `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

  மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.  மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #Darbar #KSRavikumar #HVinoth #KarthikSubbaraj

  Next Story
  ×