என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.

    விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்‌ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.



    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna

    அயோக்யா டிரைலர்:

    சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா - மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja
    `கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அடுத்ததாக படங்கள் வெளிவரவில்லை. கடந்த மார்ச் மாதம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால், சாயிஷாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

    இதுதவிர சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ மற்றும் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

    இதில் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


    மகாமுனி படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja 

    நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம் விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
    முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    இதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி போன்ற ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படம் எனக்கு நெருக்கமானது. இந்த படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரம்மாண்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரியும் ஆவலோடு இருக்கிறேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

    நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

    தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan #SamCS

    இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் மோகன்லால் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார். #MohanLal
    இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால. அவரது நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த ‘லூசிபர்‘ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு நடிகராக ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால், விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

    மோகன்லால் இயக்கும் முதல் படத்துக்கு “ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா“ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக மோகன்லால் தனது இணையதள வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


    ஒரு நடிகராக பல்வேறு சாதனைகள் புரிந்த மோகன்லால், இயக்குநராக அடியெடுத்து வைத்ததன் மூலம் அதிலும் பல சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MohanLal #BarrozGuardianOfDGama

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் பிரியா ஆனந்த், சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். #PriyaAnand
    நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி, பிரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ‘எல்.கே.ஜி.’ படத்தில் ஜே.கே.ரித்தீஷ் பிரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டார். பிரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமாக பிரியா ஆனந்த் இருக்கிறார் என்று அவர் தெரிவித்திருந்தார்.


    அந்த டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரியா ஆனந்த் கூறியிருப்பதாவது:- நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை. ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன். உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது.


    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    பிரியா ஆனந்த்தின் இந்த பதிவிற்கு பிறகு அந்த பதிவை போட்ட நபர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். #PriyaAnand

    நார்தன் இயக்கத்தில் சிம்பு - கவுதம் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் சிம்புவின் 45-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #STR45 #GauthamKarthik
    `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், சிம்பு அடுத்ததாக கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக பொருட்செலவில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.



    இதுபற்றி ஞானவேல் ராஜா கூறும்போது, முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள `தேவராட்டம்' படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #STR45 #STR #GauthamKarthik #Narthan

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இன்று இணைகிறார். #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். 

    இதற்கு முன்பாக சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் நயன்தாரா,  ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.


    மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. 

    அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara

    சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan
    `இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார். 
    `தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.

    படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார்.



    ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.



    ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RebaMonicaJohn #RheaChakraborty

    இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டு மிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal #SriLankaBlasts
    இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் உடல் சிதறி பலியானார்கள், இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது. 



    உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பின் ஆழத்தைக்கூட என்னால் யூகிக்க இயலவில்லை. இறைவன் நம்முடன் இருப்பாராக. சில நாட்களுக்கு முன்னதாக நான் இலங்கையில் இருந்தேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் எங்கும் இவ்வளவு வெறுப்பு? மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது. மறைந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்’. இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் சிவா, சூர்யாவை வைத்து இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Siva #Suriya39
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா உருவாகியுள்ள காப்பான் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அக்டோபரில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

    தற்போது `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 



    இந்நிலையில் சூர்யா - 39 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை சிவா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா, அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார். #Suriya39 #Siva #Suriya39Announcement 
    நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். #Khushbu
    பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். 



    அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் என்னை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். 

    நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்...?’. இவ்வாறு குஷ்பு கேட்டுள்ளார்.
    சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறியுள்ளார். #SriReddy
    பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவங்களை படத்தில் கொண்டு வருவதால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் உள்ளனர். படத்தை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் நடிகை சுப்ரியா, இயக்குனர் நந்தினிரெட்டி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதனை வரவேற்று ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-



    “எனது கனவுகள் இப்போது நிஜமாகி இருக்கிறது. சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை. ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். இதுவரை மோசமாக அழைக்கப்பட்டு வந்த நான் இந்த அறிவிப்பு மூலம் கதாநாயகி ஆகிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலியும், வேதனையும் இப்போது பறந்து விட்டது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
    ×