என் மலர்

  சினிமா

  சிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  X

  சிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் சிவா, சூர்யாவை வைத்து இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Siva #Suriya39
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா உருவாகியுள்ள காப்பான் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அக்டோபரில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

  தற்போது `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.   இந்நிலையில் சூர்யா - 39 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை சிவா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா, அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார். #Suriya39 #Siva #Suriya39Announcement 
  Next Story
  ×