என் மலர்
சினிமா செய்திகள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.
படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்தததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் நயன்தாரா நேற்று கலந்துகொண்ட நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Darbar
ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களுக்கு பிறகு ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
நேற்று மும்பை சென்ற நயன்தாரா, ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். ரஜினியையும், நயன்தாராவையும் காண படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் திரண்டார்கள். அவர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.

தர்பார் படத்தில் நயன்தாரா 30 நாட்கள் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் இருப்போருக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

மும்பையில் 3 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. பின்னர் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில், தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்தில் வில்லத்தனமான மற்றொரு கதாபாத்திரத்தில், கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee
இயக்குனர் பொன்.சுகீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நளினகாந்தி’ படத்தில் கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். #Kasthuri #NalinaGandhi
நடிகை கஸ்தூரி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அடுத்து நடிக்கும் படம் நளினகாந்தி. கதாநாயகன் இல்லாத இந்த படத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன், புவிஷா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். புவிஷா சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேவுக்கு உறவுப்பெண்ணாக நடித்தவர்.
படம் பற்றி இயக்குனர் பொன்.சுகீர் கூறியதாவது: ஜெயபாலன் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். அவர் மனநோய்க்கு ஆளாகிறார்.

அவரிடம் பணிபுரியும் நர்சான புவிஷா, அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட கஸ்தூரி இருவரும் அவரை எப்படி மனநோயில் இருந்து மீட்டெடுக்கிறார்கள் என்பதே கதை. நளினகாந்தி என்பது ஒரு ராகத்தின் பெயர். இது மனநோயில் இருந்து மீட்கும் சக்தி கொண்டது என்பதால் இதையே தலைப்பாக வைத்தோம். சராசரி கதைக்களம் என்ற நிறுவனம் தயாரிக்க ஜூட் ஆரோகணம் இசையமைக்கிறார்’.
இவ்வாறு அவர் கூறினார்.
`இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் ரவுடி பேபி கனெக்ஷன் ஏற்பட்டுள்ளது. #Suriya #RowdyBaby
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காப்பான் படம் இறுதி கட்டத்தில் உள்ளது.
தற்போது சூர்யா `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜி.வி.பிரகாஷின் 70வது படமாகும்.
The stunning voice behind #rowdybaby#sandakkara the lovely #Dhee sings for #Suriya38#GV70 ... recorded overseas with this superb talent ... a quirky fun trk onway ... pic.twitter.com/UBH8UqoHP9
— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2019
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை, மாரி 2 படத்தில் மிகவும் பிரபலமான ‘ரவுடி பேபி’ பாடலை பாடிய பாடகி தீ பாடி இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. #Suriya38 #GVPrakash
கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக நடிகை அமலாபால் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். #Amalapaul
அமலாபால் விவாகரத்துக்கு பின் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்தபோது அமலாவுக்கும், விஷ்ணுவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். அமலாபால் காதல் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் நடிப்பிலேயே கவனமாக இருந்தார். படப்பிடிப்பில் விடுமுறை கிடைக்கும்போது எல்லாம் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பாகி வருகிறார்.

இந்நிலையில் கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக சினேகம் என்று மலையாளத்தில் எழுதி அந்த படத்தை வெளியிட்டிருக்கிறார். அமலாபால் யாருக்கு காதல் சிக்னல் காட்டுகிறார் என ரசிகர்கள் வலைபோட்டு அமலாபால் காதலனை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
எமி ஜாக்சனின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #AmyJackson
ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் ராஜமவுலி தான் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் நடிப்பது பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். எமியின் பெயரும் அடிபட்டதால் அந்த தகவல் எமி காதுக்கு சென்றது.
ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வரும் என காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. பொறுமை இழந்த எமி, தனது கோடீஸ்வர காதலன் ஜார்ஜ் பனயிட்டுவை திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் தான் கர்ப்பம் ஆனதாகவும் அறிவித்தார்.

எமியின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் ராஜமவுலி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு வேறு, ஒரு வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்தார். அவரும் மேக்அப் டெஸ்ட் எடுத்தபிறகு என்னால் முடியாது என்று நழுவிவிட்டார். அவருக்கு பதிலாகத்தான் தற்போது நித்யா மேனன் அல்லது ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளனர். #AmyJackson
பிரபல நடிகர் துல்கர் சல்மான் பற்றி அனுமோல் கூறி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Anumol #DulquerSalmaan
தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளுக்கு தமிழ் தெரியாது. பிற மாநிலங்களில் இருந்து வருவதால் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து மனப்பாடம் செய்து பேசுகின்றனர். ஆனால் சொந்த மொழிகூட ஒரு நடிகருக்கு தெரியவில்லை என்று புகார் கூறியிருக்கிறார் ஒரு நடிகை.
சத்யராஜ் நடித்த ஒரு நாள் இரவில் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனுமோல். இவர் மலையாளத்தில் ரஞ்சித் இயக்கிய ஞான் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தார். படப்பிடிப்பின்போது துல்கர் தனது வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பிறகு பேசி நடித்தார்.

அவர் இப்படி செய்ததற்கு காரணம் துல்கருக்கு மலையாளம் தெரியாது என்று அனுமோல் கூறியிருக்கிறார். மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கருக்கே மலையாளம் தெரியாது என்று அனுமோல் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Anumol #DulquerSalmaan
பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஒரு படத்தில் நடிக்க சரி என்று சொல்லியிருக்கிறார். #VijaySethupathi #AishwaryaRajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அப்படி அவர் நடிக்க இருக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிசியாக இருக்கிறார். எனவே முதலில் மறுத்து இருக்கிறார். பின்னர் ஐஸ்வர்யா ராஜேசே விஜய் சேதுபதியிடம் கேட்க அக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா, மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் ஒரு படம், மற்றும் திலீப் நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, ‘சிந்துபாத்’ ரிலீசாக இருக்கிறது. தவிர, தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம், சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, விஜய்சந்தர் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
விஜய்யை வைத்து ‘தளபதி 63’ படத்தை இயக்கி வரும் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார். #Atlee #ThalapathyVijay
அட்லி தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில், ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லியின் திரைப்படத்தில் பணிபுரிய வந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது, அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் பேசி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #Sivakarthikeyan
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.
வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. பின்னர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவருக்கு வளசரவாக்கம் பள்ளியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.
விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna
அயோக்யா டிரைலர்:






