என் மலர்
சினிமா

ஹரிஷ் கல்யாண் ஜோடியான 2 நாயகிகள் - பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan
`இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார்.
`தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.
படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார்.

ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RebaMonicaJohn #RheaChakraborty
Next Story






