என் மலர்
சினிமா செய்திகள்
- ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது.
- எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் வித்யா பாலன், தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். மறைந்த கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபகாலமாகவே தனது எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
அது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, ''உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்த நான் ஜிம் சென்று பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் எடை குறையாமல் கூடித்தான் போனது. இதனால் பிரச்சனையை கண்டறிய டாக்டர்களிடம் சென்றேன்.
மருத்துவ பரிசோதனை இது கொழுப்பல்ல, வீக்கம் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுத்த வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பயன்படுத்தினேன். அந்தவகையில் நான் 'ஜிம்' செல்லாமலேயே எடையை குறைத்தேன்'', என்றார்.
- நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசியிருந்தார்.
- 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன்.
இவர் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசிய தை கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த புகாரில் கைதில் இருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
- அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் 'டேஞ்சர் மாமே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'டேஞ்சர் மாமே' பாடலை ஷான் ரோல்டன் இசையில் டாக்கால்டி எழுதி பாடியுள்ளார்.
கடைசியாக கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ரகு தாத்தா படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, 'பராசக்தி' படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, பராசக்தி படத்தின் 2வது பாடல் ப்ரோமோ இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த பாடல் தனக்கு மிகவும் ஸ்பெஷலான பாடல் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
"பராசக்தி" திரைப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" வருகிற 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ப்ரோமோ வீடியோ மூலம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 'பராசக்தி' படத்தின் 'ரத்னமாலா' பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. இதற்கான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது
- அஜித் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலான படம். அஜித் சார் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார். இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக வர நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்." என தெரிவித்தார். அஜித்தின் புதுப்பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- தர்மேந்திராவின் மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி விளக்கம் அளித்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனிடையே , நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து , நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை மீண்டும் மோசமான நிலையில், அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்து பல்வேறு திரை பிரபலங்கள் தேமேந்திராவை காண அவரது வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் தர்மேந்திரா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்ப்பட்டுள்ளது.
- விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
- தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தலைவன், தலைவி படத்திற்கு பின் பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இப்படத்தில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா இணைந்தனர். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரம்மாஜி, துனியா விஜய் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்பு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், சிலகாரணங்களால் வெளியிடப்படவில்லை. விரைவில் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை.
- 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவு.
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஶ்ரீராம், "15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்" எனக்கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியானால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?" எனவும் விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.
இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
- தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது
- மாஸ்டர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'பாம்'. இதில் நடிகர் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் தாஸின் புதியபட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்குகிறார். நடிகை தேஜு அஷ்வினி நடிக்கவிருக்கிறார்.
மேலும் நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சூப்பர் ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாலையா நடிப்பில் 2021-ல் வெளியான அகண்டா படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- அகண்டா 2 படத்தில் சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது.
இந்நிலையில், 'அகண்டா 2' படக்குழுவினர். லக்னோவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார்.
- இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டாங் லீ வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார்.
இந்நிலையில், நேற்று பிரபாஸ் - சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் 'ஸ்ப்ரிட்' படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டாங் லீ வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இன்ப்ளூயன்சராக இருக்கிறார் நாயகன் மற்றும் சிலர். தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற யூடியூப் இன்ப்ளூயன்சர்களை தேர்ந்தெடுக்கும் மர்ம நபர் கடத்தி கொலை செய்கிறார். இதுபோன்று, யூடியூப் இன்ப்ளூயன்சரான நாயகனும் கடத்தப்படுகிறார்.
மர்மமாக கொலை செய்யும் தொடர் கொலையாளி யார்? கொலையாளியின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதையின் நாயகனாக வரும் மஹேந்திரன் கதாப்பாத்திற்கு ஏற்ப இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி நீமா ரேய் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார். படம் முழுவதும் தொய்வு இருக்கிறது. படம் எடுக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார். இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு
காட்சிகளை நேர்த்தியாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ரேட்டிங்- 1/5






