என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி திரைக்கு வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து, 'பராசக்தி' படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அறிவித்தார்.

    அதன்படி, பராசக்தி படத்தின் 2வது பாடல் ப்ரோமோ இன்று மாலை 5.30 மணிக்கும வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. மேலும், இந்த பாடல் தனக்கு மிகவும் ஸ்பெஷலான பாடல் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், "பராசக்தி" திரைப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" வருகிற 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    • ‘மாஸ்க்’ படம ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை குறிவைக்கின்றனர்.

    அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாக்ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதனிடையே, பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதித்த ஒரு நிஜ வாழ்க்கை ரியல் எஸ்டேட் மோசடியில் இருந்துதான் மாஸ்க் படத்திற்கான யோசனை வந்ததாக இயக்குநர் விகர்னன் அசோக் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், இது என் வாழ்க்கையில் நடந்தது. நான் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியில் பாதிக்கப்பட்டேன். இதுபோன்ற மோசடிக்காரர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை குறிவைக்கின்றனர்.

    மோசடி கும்பல் விரும்பும் மக்கள், நம்பிக்கையுடன் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுக்கத் தயங்குவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அன்றாடப் பொறுப்புகள் காரணமாக பலர் எதிர்ப்பு தெரிவிப்பதையோ அல்லது எதிர்த்துப் போராடுவதையோ கடுமையாக்குகின்றன.

    படித்தவர்கள் ஏமாற்றப்படும்போது, அவர்கள் கோபப்படுவது உறுதி. ஆனால், அவர்களால் எதிர்வினையாற்ற முடியாது. அந்த நிலையில் உள்ள ஒருவருக்கு இறுதியாக பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்ற யோசனையால் வந்தக் கேள்வி இறுதியில் மாஸ்க்கின் முன்மாதிரியாக வளர்ந்தது என்றார்.

    இதனிடையே, மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்ட பணத்தை கிடைத்ததா? என்ற கேள்விக்கு இயக்குநர் விகர்னன் அசோக், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2025 இல், எங்கள் பணம் திரும்ப கிடைத்தது என்றார்.

    • உணவில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
    • எனக்கு பிடித்ததை நான் முழு மனதுடன் சாப்பிடுகிறேன்.

    தமிழ் திரை உலகில் கதாநாயகிகள் பலர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

    சிலர் அளவோடு சாப்பிட்டு கொழுப்பு இல்லாத உணவுகளையும் பெரும்பாலும் ஜூஸ் போன்ற பொருட்களையும் சாப்பிடுகின்றனர்.

    இது மட்டுமின்றி உடற்பயிற்சி மூலமாகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பேணி காத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி சுவாரசியமாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் ஒரு நாளைக்கு 10 தோசைகள் மற்றும் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். உணவில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடுகிறேன். எனக்கு பிடித்ததை நான் முழு மனதுடன் சாப்பிடுகிறேன். ஆனால் விரும்பும் அளவிற்கு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் குண்டாக மாட்டேன் என்றார்.

    • 34 வயதான ஹனி ரோஸ் ரேச்சல் படத்தை தவிர அவரிடம் வேறு எந்த படமும் இல்லை.
    • 30 வயதை தொட்ட சம்யுக்தா மேனன், அபர்ணா பாலமுரளி போன்ற நடிகைகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

    திரையுலகில் கதாநாயகிகள் பலர் திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருந்து வருகின்றனர். பல நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    மலையாள திரை உலகிலும் சில நடிகைகள் இன்னும் திருமண பந்தத்தில் இணையவில்லை.

    பார்வதி திருவோத்து

    விக்ரம் நடித்த 'தங்கலான்' படத்தின் கதாநாயகியான பார்வதி திருவோத்து 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    மடோனா செபாஸ்டியன்

    நடிகை மடோனாவுக்கு 34 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர் திருமண பந்தத்தில் இணையவில்லை.

    ஐஸ்வர்யா லட்சுமி

    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 34 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

    ஹனி ரோஸ்

    34 வயதான ஹனி ரோஸ் ரேச்சல் படத்தை தவிர அவரிடம் வேறு எந்த படமும் இல்லை. ஆனாலும் இன்னும் கல்யாணமா? பார்ப்போம் என்கிறார்.

    மாளவிகா மோகனன்

    நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் மாளவிகா திருமணமா? பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார்.

    இதேபோன்று 30 வயதை தொட்ட சம்யுக்தா மேனன், அபர்ணா பாலமுரளி போன்ற நடிகைகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

    • இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கி இருந்தார்.
    • 5 மொழிகளில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியானது.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் வெளியான படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கி இருந்தார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்து இருந்தது.

    'ஆர்யன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறாத நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், 'ஆர்யன்' படம் வருகிற 28-ந்தேதி ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

    நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' வருகிற 27-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    முன்னதாக இப்படம் தொடர்பாக வெளியான டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், 2-வது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இவர் ‘கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
    • நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார்.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பென்ஸ்' திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

    'பென்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2' படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், 'பென்ஸ்' படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 



    • குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்குமார் கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
    • அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது.

    இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார். 

    • நேத்ரா மண்டேனா - வம்சி காடிராஜு ஜோடிக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.
    • இந்த திருமணத்தில் திரை நட்சத்திரங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் பத்மஜா மற்றும் ராம ராஜு மண்டேனாவின் மகள் நேத்ரா மண்டேனாவுக்கும் சூப்பர் ஆர்டரின் இணை நிறுவனர் வம்சி காடிராஜுக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தில், பல்வேறு தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் சர்வதேச விருந்தினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், டிரம்ப் ஜூனியர், ஜான்வி கபூர் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் நடனமாடினர். இந்த கலை நிகழ்ச்சிகளை திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். 

    • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தேர்தலில் விநியோகிக்க வைத்திருந்த ரூ.440 கோடி பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில், 'மாஸ்க்' படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் இப்படம் 2 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நேற்றுமுன்தினம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமும் 'மாஸ்க்' தான். இதன்மூலம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 திரைப்படமாக 'மாஸ்க்' அமைந்திருக்கிறது.

    கடைசியாக கவின் நடிப்பில் வெளியான 'கிஸ்' திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.40 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
    • விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதாகோவிந்தம்', ‘டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

    தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன. சமீபத்தில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில், ''என் மனதில் இருந்த வலியும், வேதனையும் இப்போது மறைந்துவிட்டன. எனக்குள் இப்போது மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம், விஜய் தேவரகொண்டா தான். என்னுடைய எல்லா வலிகளுக்கும் அவர்தான் மருந்தாக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் 'கீதாகோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. மேலும் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 26-ந்தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    லாக்டவுன் திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

    நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

    இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

    இந்நிலையில், லாக்டவுன் திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நாளை திரையிடப்பட உள்ளது.

    ×