என் மலர்
சினிமா செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மகத். இவர் மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் தனது பிசிக்கல் டிரான்ஸ்பர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மகத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம்.
இந்த நிலையில், மகத் ராகவேந்திரா வேற லெவல் லுக்கில் கலைப்பயணத்தின் அடுத்தக்கட்டத்திற்குள் நுழைகிறார்.
இதுதொடர்பாக நடிகர் மகத் ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊடக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும்,
எனது கலைப்பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே, உங்கள் ஆதரவு எனக்கு என்றும் நிலையான பலத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. ஒரு கலைஞராகவும், தனிநபராகவும் எனது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்ததில் உங்கள் ஆதரவுக்கு முக்கியப் பங்குண்டு.
கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள 'Mechanic' என்ற புகைப்படத் தொகுப்பு. இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது.
இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும்.
கடவுள் ஆசீர்வாதத்துடன், எனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய அத்தியாயத்திலும், நான் எப்போதும் மதிக்கும் உங்கள் ஆதரவைத் தேடுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.
- கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார்.
30 வயதை தாண்டியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவர் திவாகர் தொடர்ச்சியாக நேர்காணல்களில் கூறி வருகிறார். இந்நிலையில், திவாகருக்கு திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அப்புகைப்படத்தில் திவாகர், கோட் சூட் போட்டுக்கொண்டு, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கிறார். அவர்களுக்கு பின்னால் திருமண மேடை பேக்-கிரவுண்டில் 2018ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதே சமயம் இந்த புகைப்படம் உண்மையா என்று தெரியவில்லை. இதுகுறித்து திவாகரின் பதில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, பராசக்தி படத்தின் 2வது பாடல் ப்ரோமோ நாளை மாலை 5.30 மணிக்கும வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் ஜி.வி.பிரகாஷிற்கு மிகவும் ஸ்பெஷலான பாடல் என அவரே தெரிவித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'HK15'-ல் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15-வது படமாகும்.
தொடர்ந்து, வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஹரிஷ் கல்யாணின் 15வது படத்திற்கு 'தாஷமக்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான, ப்ரோமோவை படக்குழு அறிவித்துள்ளது.
- இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
- சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.
நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது.
அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
- கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
- இந்த வார டாஸ்க்கில் சிறந்த அணியாக மாப் மாயாவிஸ்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
அதன்பின்பு துஷார் மற்றும் பிரவீன் ராஜ் மற்றும் திவாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் வீட்டின் வழக்கமான வேலைகளையே டாஸ்க் போல போட்டியாளர்கள் விளையாடினர். இதில் சிறந்த அணியாக மாப் மாயாவிஸ் அணியும் மோசமான அணியாக சாம்பார் ஸ்குவாட் அணியும் தேர்வானது.
இந்நிலையில், இந்த வார எவிக்ஷனில் கெமி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலு உங்க கண்ணுக்கு தெரியிறது ‘ஒரு மதம்’.
- தெய்வத்தோட தலையிட்ட நாங்க தண்டிப்போம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
டிரெய்லரில், "இந்த உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலு உங்க கண்ணுக்கு தெரியிறது 'ஒரு மதம்'. இந்த நாட்டுல எங்க பாத்தாலும் உங்க கண்ணுக்கு தெரியிறது ஒரு தர்மம், 'சனாதன இந்து தர்மம்'. தேசத்தோட தலையிட்டா நீங்க கண்டிப்பீங்க, தெய்வத்தோட தலையிட்ட நாங்க தண்டிப்போம்" போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது வெளிநாட்டினரால் சனாதன தர்மத்திற்கு வரும் ஆபத்தை தடுக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- பா.ரஞ்சித் தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.
- கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் பா.ரஞ்சித் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து இருவரும் அடுத்த படத்தில் ஒன்றாக இணைவார்களா என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
- மொத்த எடையையும் ஒரேகாலில் போட்டநிலையில் எலும்புமுறிவு
Eetha படத்தின் நடனக் காட்சியை ஒத்திகை செய்து பார்க்கும்போது நடிகை ஸ்ரத்தா கபூர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் 'ஈதா'. இப்படத்தில் விதாபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட் டால் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். ரந்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்கிறார். லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு நடக ஒத்திகை செய்து பார்த்தபோது ஸ்ரத்தா கபூரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நடனத்தின்போது மொத்த உடல் எடையையும் இடதுகாலில் போட்டதாக தெரிகிறது. இதனால் இடதுகால் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை இரண்டு வாரத்திற்கு இயக்குநர் உடேகர் நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் முக்கிய காட்சிகளை எடுத்துவிடலாம் என ஸ்ரத்தா கூறியதாக தெரிகிறது. இச்செய்தி ஸ்ரத்தா கபூர் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி இருந்தனர்.
- எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை.
சமீப காலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் பெயரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது நடிப்பில் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் பெயரில் போலியாக வெளியிடப்படும் அறிவிப்பு மற்றும் அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அதேபோல், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
- 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
- அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் கடந்த 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர் சேரன். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலருக்கும் மோட்டிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.
இந்த நிலையில், 'ஆட்டோகிராப்' படம் வெளியாகி 7நாட்கள் ஆன நிலையில் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு சேரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள செய்தியில், 21 வருடங்களுக்கு பின் வெளியானபோதும் கொண்டாடி படம் பார்த்து பாராட்டிய அனைத்து மக்களுக்கும் நன்றி...
சில புதிய படங்கள் மூன்று நாட்கள் திரையரங்கில் தொடர்வது கடினமாக இருக்கும் காலத்தில் மறு வெளியீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் ஓடியிருப்பது மகிழ்ச்சி... அதற்கு ஒத்துழைத்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

- யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
- இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'மகாசேனா'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மகாசேனா' படத்தின் கதை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில BTS ஸ்டில்களை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'மகாசேனா' படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






