என் மலர்
சினிமா செய்திகள்
- 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
- அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் கடந்த 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர் சேரன். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலருக்கும் மோட்டிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.
இந்த நிலையில், 'ஆட்டோகிராப்' படம் வெளியாகி 7நாட்கள் ஆன நிலையில் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு சேரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள செய்தியில், 21 வருடங்களுக்கு பின் வெளியானபோதும் கொண்டாடி படம் பார்த்து பாராட்டிய அனைத்து மக்களுக்கும் நன்றி...
சில புதிய படங்கள் மூன்று நாட்கள் திரையரங்கில் தொடர்வது கடினமாக இருக்கும் காலத்தில் மறு வெளியீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் ஓடியிருப்பது மகிழ்ச்சி... அதற்கு ஒத்துழைத்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

- யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
- இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'மகாசேனா'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மகாசேனா' படத்தின் கதை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில BTS ஸ்டில்களை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'மகாசேனா' படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'HK15'-ல் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15-வது படமாகும்.
இந்த நிலையில், வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் நடக்கிறது.
- துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது.
2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பின்லாந்து திரைப்படம் "SISU". இப்படம் இரண்டாம் உலகப் போரில் முடியும் தருவாயில் 1944 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். பின்லாந்தில் வாழும் முன்னாள் கமாண்டோ அட்டாமி கோர்பி பின்லாந்தின் வடக்கு சமவெளியில் தனியே தோண்டுதல் பணி நடத்தி தங்கத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லும்போது ஹிட்லரின் நாஜி படை அதிகாரிகள் அவரின் தங்கத்தை பரித்துச் செல்கின்றனர்.
அட்டாமி கோர்பி அவர்களை துரத்திச் சென்று தனது தங்கத்தை மீட்பதே கதை. சாதராண முதியவர் என்ற பிம்பத்துக்கு பின்னால் அட்டாமி கோர்பியின் மிகவும் ஆக்ரோஷமான முன்னாள் கமாண்டோ என்ற பிம்பம் வெளிப்படும். இதுவே படத்தின் உயிர்நாடி. அட்டாமி கோர்பியை, "SISU"என்ற பின்னாலாந்தின் அர்பேன் லெஜண்ட் ஆக அவ்வூர் மக்கள் கருதுவார்கள். படம் முழு அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த பிம்பத்தோடு அவர் எதிர்கொள்ளப் போகும் புதிய சவால் என்ன?. அதுவே தற்போது வெளியாகி உள்ள 'SISU - தி ரோட் டு ரிவெஞ்ச்' என்ற இரண்டாம் பாகம்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 1946 காலகட்டத்தில் SISU இரண்டாம் பாக கதை நகர்கிறது. இரண்டாம் உலகப் போரில் தனது குடும்பத்தை இழந்த பிறகு, அட்டாமி கோர்பி அவர்களுடன் வாழ்ந்த மர வீட்டை பிரித்து மூட்டை கட்டி அமைதியான ஒரு இடத்தில் வீட்டை மீண்டும் உருவாக்கி வாழலாம் என புறப்படுகிறார். இதன்போது அவர் சோவியத் யூனியன் எல்லைக்குள் நுழையவே இதை அறிந்த சோவியத் யூனியனின் செம்படைத் தலைவர் இகோர் அட்டாமியைக் கொல்ல தனது படைகளுடன் செல்கிறார்.
அவர்களே தனது குடும்பத்தை கொன்றவர்கள் எனவும் அட்டாமி கோர்பி அறிகிறார். அவர்களிடம் இருந்து தான் பெரிதாக கருதும் வீட்டின் மர பாகங்களை எப்படி அட்டாமி காற்றினார், தனது குடும்பத்துக்காக அவர்களை பழிவாங்கினாரா, அமைதியாக இடத்தில் மீண்டும் வீட்டை கட்டும் தனது கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

இயக்கம்:
இந்த முழு படத்திலும் பத்து பக்க வசனங்கள் கூட இல்லை. படம் முழுவதும் ஆக்ஷனால் நிரம்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, ரத்தம் என ஒரே சண்டை மையமாக கிராபிக் வலயன்ஸ் காட்சிகளுடன் படம் நகர்கிறது. எனவே ஆக்ஷன் ரசிகர்களுக்கு படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது.
முதல் பாகத்தை போலவே மிகவும் ஆக்ரோஷமான காட்சிகளுடன் படம் நகர்கிறது. இருப்பினும் காட்சிகளிலும் கதையிலும் முதல் பாகத்தில் இருந்த வலு குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாதபோது வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானதால் அவ்வாறு தோன்றலாம்.
நடிகர்கள்:
அட்டாமி கோர்பி கதாபாத்திரத்தில் பின்லாந்து நடிகர் ஜோர்ம டோம்மிலா நடித்துள்ளார். படம் முழுவதும் அவர் பேசாமல், தனது முதிர்ந்த மற்றும் ஆக்ரோஷமான உடல் மொழியால் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்.
சோவியத் செம்படைகளின் தலைவராக இகோர் கதாபாத்திரத்தில் ஜாக் டூல்டன் நடித்துள்ளார். அட்டாமி கோர்பியை மையமாக வைத்தே கதை நகர்வதால் மற்ற பாத்திரங்கள் பெரிதும் வெளித்தெரியவில்லை.

ஒளிப்பதிவு:
படத்தின் ஒளிப்பதிவை மிகா ஒராசமா கையாண்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடர்ந்த காடுகளின் பின்னணியில் நடக்கும் கதையை நம்பும்படியாக படம்பிடித்துள்ளார்.
சண்டைக் காட்சிகளுக்கு ஒராசமாவின் மெனக்கிடல் படத்தில் பிரதிபலிக்கிறது. அதிகப்படியான ரத்தம் மற்றும் கிராஃபிக் வன்முறை காட்சிகளை காத்திரம் குறையாமல் காட்டியிருக்கிறார்.
பின்னணி இசை
அட்டாமி கோர்பி ஒரு வார்த்தை கூட பேசாததால், கதைப் பின்னணியின் தீவிரத்தையும், அவரது உணர்ச்சியையும் பார்வையாளருக்கு யாரிட் கிளிஞ்சர் உடைய அழுத்தமான பின்னணி இசை வெற்றிகரமாக கடத்தியுள்ளது.
ரேட்டிங் : 3.5 / 5
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.
இந்த நிலையில், அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் டீசரை நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு "வித் லவ்" என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்,"என் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் WithLove படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பார்" என குறிப்பிட்டுள்ளார்.
நாயகன் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் எழுத்தாளர் ஒருவர் விபத்தில் சிக்குகிறார். அதன் பிறகு அங்கேயே மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். சில நாட்களில் தொழிலதிபரான ராம்குமார் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.
அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்க, இதை யார் செய்தார்கள் என்பதை தீவிர விசாரணையில் இயங்குகிறார் அர்ஜுன். ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை எல்லாம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார் என்பது தெரிய வருகிறது.
இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார்? எதற்காக கொலைகள் செய்கிறார்? போலீஸ் அதிகாரியான அர்ஜுன் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷை கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடை, உடை, உடல் மொழி, ஆக்சன் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன காட்சிகளில் கவனம் பெற்று இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார்.
அபிராமி வெங்கடாசலம், ஐஸ்வர்யா ராஜேஷ் இன் காதலராக வரும் பிரவீன் ராஜா, தொழிலதிபர் ராம்குமார், போலீஸ் கான்ஸ்டபிள் தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன். ஒரு கொலை, அதன் பின்னணி, ஒரு பிளாஷ்பேக் என வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்த கதையை அப்படியே எடுத்திருக்கிறார். முதல் பாதையில் திரைக்கதை புரியாமல் செல்கிறது. இரண்டாம் பாதியில் வழக்கமான திரைக்கதையாகவே செல்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒரு திருப்பம் மட்டும் ரசிக்க வைக்கிறது.
இசை
பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ஒன்று மட்டுமே கேட்கும் படியாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு ஒட்டவே இல்லை.
ஒளிப்பதிவு
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்: 1.5
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் கவின் தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல் நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் தவறான செயல்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் பணியை ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார்.
இறுதியில் கவின் அந்த பணத்தை கண்டுபிடித்தாரா? பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
ஒரு இடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அதே இடத்தில் கொடுக்க வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக். டார்க் காமெடி ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார். பெரியதாக டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. நெல்சன் இன் பின்னணி குரல் படத்திற்கு பலவீனம்.
இசை
ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கிறது.
- மாலை புது அப்டேட் கொடுக்கும் ஜனநாயகன் படக்குழு
- மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தகவல்
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் ஆடியோ லாஞ்ச் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் மாலை வர இருக்கும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
நாயகி பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது.
இதன் காரணமாக, பூர்ணிமா தன்னுடைய சிறு வயதில் பழகிய நபர்களை தேடிச் செல்கிறார். இறுதியில் அவர்களை சந்தித்தாரா? பூர்ணிமா ரவியின் வாழ்க்கை என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் தோல்வி, அழுத்தம் கொடுக்கும் வேலை, குடும்ப பாரம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகனாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்கள் ஒன்றாக பயணிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தந்தையாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் அனுபவ நடிப்பையும், சிறு வயது தோழியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன். அழுத்தமான தருணங்களிலும், தோல்விகளின் போதும் நம்மை எவ்வாறு எதிர் கொண்டு, அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி எப்படி பயணப்பட வேண்டும் என்பதை, அழகாக சொல்லியிருக்கிறார். தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வசனங்கள் பாராட்டும் படி இருக்கின்றன. இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
கிளிஃபி கிரிஸ், இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி சரி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவு
அபி ஆத்விக்கு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலை, அருவி என இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது சிறப்பு.
- அதிக சந்தை மதிப்பை கொண்ட தளமாக இந்தியா இருக்கிறது.
- நெட்பிளிக்ஸ் ஐதராபாத்தில் தனது புது அலுவலகத்தை திறந்துள்ளது.
தென்னிந்திய திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்கும் முடிவை நெட்பிளிக்ஸ் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குபதில் நல்ல கதையம்சம் கொண்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற OTT நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது நெட்பிளிக்ஸ் நல்லவிலை கொடுத்து படத்தை வாங்குவதால் இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸின் இந்த மாற்றம் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட் படங்களை தவிர்க்கவும், உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.
அதிக பார்வையாளர்களை கொண்ட தளமாக இந்தியா இருந்தாலும் சந்தைப்போட்டி, ஒரு பயனருக்கான சராசரி வருவாய் குறைவாக வருவது (ARPU) போன்றவை இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களை இரட்டிப்பு மூதலீட்டை போட்டு வாங்கும் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் உள்ளது.
இருப்பினும் படங்களைவிட இணையத்தொடர்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், செலவை குறைத்து தங்கள் சந்தை மதிப்பை கூட்ட இந்த முடிவை கையில் எடுத்துள்ளது. தற்போது ஐதராபாத்திலும் தனது அலுவலகத்தை விரிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
- சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது.
யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங் கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை அடையாளப்படுத்தும் வகையில் எனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன் படுத்தக் கூடாது.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் "இசை அமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்" என்று கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், "இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது" என்றார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.






