உறுதியான வில்லன்... அப்போ ஹீரோ யாரு?

படத்தை நெல்சன் இயக்குகிறார்.ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
உறுதியான வில்லன்... அப்போ ஹீரோ யாரு?
Published on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக 'KH x RK Reunion' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்திற்கு அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இன்பநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் புரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது. ஆனால் ரசிகர்கள் பலருக்கும் இருக்கும் கேள்வி படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன்? என்பதுதான். புரோமோவில் கூட கமலும் இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். இந்நிலையில் இருவருமே வில்லன் இல்லை எனவும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டிதான் இப்படத்தின் வில்லன் எனவும் தற்போது தகவல் வெளியாகிவருகிறது.  ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

ரஜினி தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2' மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

X

Maalai Malar
www.maalaimalar.com