என் மலர்
சினிமா செய்திகள்

இதுதான் கெமிஸ்ட்ரி.. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி இணைந்து நடித்த படத்தின் பாடல்!
நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர்.
கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்தார்.
ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதலே அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர்.
இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்காதபோதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
இந்த நிலையில் மிக சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய தகவல் வெளிவந்தது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரது திருமணம் நேற்று முன் தினம ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.
திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் ரணபலி படத்தின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
இந்த பாடலிலும் இருவரும் திருமணம் செய்து புது வாழ்வை தொடங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் கவனம் பெற்று வருகிறது.
விஜய் தேவரகொண்டாவின் டாக்சிவாலா படத்தை இயக்கிய ராகுல் சாங்கிருத்யாயன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
'தி மம்மி' புகழ் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
செப்டம்பர் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.






