என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரி இளவழகன்"

    • மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது.
    • 7-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான இன்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'.

    அதேபோல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது.

    இரண்டு படங்களையும் தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது.

    இந்த நிலையில் தனது 7-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான இன்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஜமா புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

    விஜய் சேதுபதி தயாரிப்பில், பிஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய காமெடி படமாக உருவாகி இருக்கிறது.
    ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து சென்னை பழனி மார்ஸ் என்ற ட்ராவல் படமொன்றை உருவாக்கி இருக்கிறார். பிஜூ இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்க வசனம் எழுதியிருக்கிறார்.

    உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை மையப்படுத்திய கதையை ப்ளாக் காமெடி ஜானரில் உருவாக்கியிருக்கிறார்.



    பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ.ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     
    நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாக, விக்னேஷ் ஜெயபால் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×