என் மலர்
சினிமா செய்திகள்

ஜமா புகழ் பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
- மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது.
- 7-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான இன்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'.
அதேபோல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது.
இரண்டு படங்களையும் தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் தனது 7-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான இன்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜமா புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார்.






