என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மகரம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்தேன் - நடிகை இஷிதா
    X

    "மகரம்" படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்தேன் - நடிகை இஷிதா

    இந்தப் படம் ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக "மகரம்" உருவாகியுள்ளது.

    ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இந்தப் படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை இஷிதா பேசிய போது, "இந்தப் படத்தில் 'நாவிஸ்' என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். மொழி வேறுபாடு இருந்தாலும், படக்குழுவினர் என்னை மிகவும் அன்பாக ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் அகஸ்டின் பிரபு பற்றி கூறியே ஆகவேண்டும்.

    இந்தப் படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் வைக்க நினைத்தாலும், "ப்ராசஸ்ஸை நம்புங்கள்" என்று அவர் சொல்வார். டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம், என்றார்.

    Next Story
    ×