என் மலர்
சினிமா செய்திகள்
- டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட படங்களுடன் போட்டியிடுகிறது.
- ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.
2026 மார்ச் 15 இல் நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் தகுதி பெற்ற படங்களில் 'மகாவதார் நரசிம்மா' இடம்பிடித்துள்ளது.
டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட அனிமேஷன் படங்களுடன் 'மகாவதார் நரசிம்மா' போட்டியிடுகிறது.

இந்தியில் அறிமுக இயக்குனர் அஷ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 'மகாவதார் நரசிம்மா' படம் யாரும் எதிர்பாராத வகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது.
ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.
முன்னதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அவர் அளித்த பேட்டியில், "டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க், அவதார் போன்ற ஹாலிவுட் படங்களும், மகாபாரதம் போன்ற நமது காவியங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.
அந்த உத்வேகத்துடன், சர்வதேச அளவில் ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பினேன். நான் அனிமேஷின் பெரிய ரசிகன். இந்தப் படம் எனது குழந்தைப் பருவ நினைவுகள் மற்றும் நான் பார்த்த படங்களின் பாதிப்பில் உருவானது" என்றார். இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
- 'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று வீரமரணமடைந்த அருண் கேத்ரபாலின் வாழ்க்கையை மையமாக கொண்டது.
- தர்மேந்திரா, அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார்.
பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (89) நேற்று முன் தினம் காலமானார். சிறிது காலமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த தர்மேந்திரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் தனது மகன் பாபி தியோலின் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் அங்கேயே காலமானார்.
இந்த துயர நேரத்தில் அவரது கடைசி பட போஸ்டர் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அவர் இறந்த நாளில், அவரது கடைசி படமான 'இக்கிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று 21 வயதில் வீரமரணமடைந்தவரும், பரம் வீர் சக்ரா விருது பெற்றவருமான அருண் கேத்ரபாலின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
இந்தப் படத்தில், தர்மேந்திரா அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார். அருணின் வேடத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா நடிக்கிறார்.
தர்மேந்திராவின் வெள்ளித்திரையில் கடைசியாகத் தோன்றும் இந்தப் படம், டிசம்பர் 25, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.
இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில் அட்டகாசம்' திரைப்படம் வரும் 28ம் தேதி(வெள்ளிக்கிழமை) ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட படத்தின் புதிய டிரெய்லரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
சமீபமாக கார் ரெஸிங்கில் அஜித் பிஸியாக உள்ளார். அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அட்டகாசம் ரீரிலீஸ் ரிலீஸ் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்னத்திரை நடிகை பவித்ரா, "சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் எவ்வளவோ சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.
- சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் பராசக்தி படம் உருவாகி உள்ளது.
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 'பராசக்தி' படத்தின் 2-வது பாடலான 'ரத்னமாலா' தற்போது வெளியாகியுள்ளது.
- இப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்டது.
- லாக்டவுன் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் லாக்டவுன். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்கநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கனா கலைந்துமே போனதே பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
- மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
- கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
புதுச்சேரி ஏம்பலம் அருகே தமிழக பகுதியான தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் எனப்படும் அழகு முத்தையனார் கோவில் உள்ளது.
இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் இக்கோவிலில் நேர்த்திக்கடனாக சிலை வைத்து வழிபட்டால் குழந்தைபேறு மற்றும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
இந்நிலையில் நடிகர் விஷாலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை சாய் தன்ஷிகா தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
நடிகை சாய் தன்ஷிகாவை கண்ட பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- ‘சூர்யா46’ அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
- ‘சூர்யா47’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.
'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, நஸ்ரியா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் அடுத்தாண்டு இந்த 3 படங்களும் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று படங்களும் வெவ்வேறு மொழி இயக்குநர்களுடன் மூன்று வெவ்வேறு கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
- இப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலாவும் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
இதனிடையே, 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாவதற்கு 50 நாட்களுக்கான கவுண்டவுடன் தொடங்கியதை குறிக்கும் வகையில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தொடர வேண்டும் என்று கூறினார்.
- நிறைய பிரச்சனைகளும் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தயாரிப்பாளர் சினிஷ் தன்னுடைய Soldiers Factory தயாரிப்பு நிறுவனம் மூலம், அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' மற்றும் பைனலி பாரத் நடிக்கும் 'நிஞ்சா ஆகிய படங்களை தயாரிக்கிறார். இப்படங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித், வெங்கட்பிரபு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவா, ஆர்யா என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:- பல வருடங்களுக்கு முன்பு, நான் சினிஷின் அலுவலகத்தில் இருந்தபோது, திரைத்துறையில் நான் என்னவாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார். அந்த நேரத்தில், நான் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
அதே நேரத்தில் 'வேட்டை மன்னன்' படத்தில் உதவியாளராக ஒரு சிறிய நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற உண்மையான லட்சியம் இல்லை, ஆனால் நான் அதைத்தான் விரும்புகிறேன் என்று அவரிடம் சாதாரணமாகச் சொன்னேன். அவர் உடனடியாக, "சிவா, உங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற வேலை?" என்று கேட்டார், மேலும் எனக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக அவர் உணர்ந்ததால், நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தொடர வேண்டும் என்று கூறினார்.
இந்த சம்பவம் எனக்கு மறந்துவிட்டது. நான் ஹீரோவாக நடிக்க தொடங்கிய சில வருடங்கள் கழித்து, அவராகவே என்னை தொடர்புகொண்டு 'அன்னைக்கு பேசினது எதையும் மனசுல வெச்சிக்காதீங்க' என்றார். அந்த சம்பவம் நடந்ததையே மறந்துவிட்டு, என் வேலைகளில் கவனமாக இருந்ததால் இவரிடம் பேச முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் இவர் மேல் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டார். இவர் இப்படி வெளிப்படையாக பேசக்கூடியவர். அதனால் நிறைய பிரச்சனைகளும் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இன்னுமும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்த மாதிரி வெளிப்படையாக பேசக்கூடிய சினிஷை நீங்கள் எப்படி கையாளப்போகிறீர்கள் என்பதுதான் சவால் என்றார்.
இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
- ‘அரசன்’ படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது. மேலும் 'அரசன்' படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'அரசன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
- பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் முருகு இயக்கத்தில் பிரபல யூடியூபர் 'பைனலி' பாரத் நடிக்கும் படம் 'நிஞ்சா'. இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இப்படத்தை கே. எஸ். சினிஷ் மற்றும் எஸ். சாய் தேவானந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார். இப்படம் தொடர்பாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, இந்தப் படம் ஒரு செல்ல நாயை மையமாகக் கொண்ட ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






