ஹோலி பண்டிகை கொண்டாடிய திரையுலக பிரபலங்கள்

வர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி ஹோலி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படத்தை நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளனர். வருண்தவான் தனது மனைவி நடாஷா தலாலுடன் கொண்டாடினார்.
ஹோலி பண்டிகை கொண்டாடிய திரையுலக பிரபலங்கள்
Published on

வடமாநிலத்தவர்களின் புனித பண்டிகையான ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் குடும்பத்தோடும், நண்பர்களோடும் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். வர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி ஹோலி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படத்தை நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளனர்.

விக்கி கவுசல்- கத்ரீனா கைப், வருண் தவான், கிருதி சனோன் ஆகியோர் ஹோலி புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். கத்ரீனா கைப் கணவர் விக்கி கவுசல், மைத்துனர் சன்னி மற்றும் சகோதரி இசபெல் கைப்புடன் கொண்டாடினார்.

கிருதி சனோன் பெற்றோர் சகோதரியுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் குடும்பத்தில் இருந்து உங்களுக்கு ஹோலி வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். வருண்தவான் தனது மனைவி நடாஷா தலாலுடன் கொண்டாடினார். மேலும் ரன்பீர் கபூர், ஊர்மிளா மடோன்கர், அலிபசல், ரிச்சாதத்தா, ஷபானா ஆஸ்மி உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com