என் மலர்
சினிமா செய்திகள்
- நான் என்ன உடை அணிந்தால் யாருக்கு என்ன பிரச்சினை?
- இவர்களின் மனநிலை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போகிறது.
இந்தி மொழி சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஆயிஷா கான், பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 'ஜாட்'. 'கிஸ் கிஸ்கோ பியார் கரூன்-2' படங்களில் நடித்தார். துரந்தர் படத்தில் இவரது வளைவு நெளிவான ஆட்டமும் பேசப்பட்டது.
இதற்கிடையில் தினந்தோறும் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் பகீர் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் என் உடல் அங்கங்கள் பற்றி குறிப்பிட்டு, பாலியல் ரீதியாக பேசுகிறார்கள். நான் என்ன உடை அணிந்தால் யாருக்கு என்ன பிரச்சினை? இவர்களின் மனநிலை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போகிறது. தரக்குறைவான விமர்சனங்களை பேசும்போது, அது சம்பந்தப்பட்டவரின் மனதை காயப்படுத்துமே என்று யோசிக்க மாட்டார்களா...
அந்தவகையில் எனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அந்த மோசமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பிரபலமாக இருப்பதால் இவ்வளவு காயத்தை சந்திக்க வேண்டுமா? என்ற யோசனை, ஒவ்வொரு நாளும் என்னை பய முறுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.
- மார்.12 நெட்ஃபிளிக்ஸில் படம் வெளியாகிறது.
- சமீபத்தில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் Made in Korea. இப்படத்தை ஆர்.ஏ. கார்த்திக் இயக்கியுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுவயது முதல் கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தென்கொரியா செல்கிறார்.
அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அங்கு கிடைக்கும் நட்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு ஃபீல்குட் மூவியாக உருவாகி உள்ளது படம்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. மார்ச் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
- லீடர் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
- இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது..
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் நாளை காலை 10:40 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
- யூடியூபர் ஹர்ஷத்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் Aura 10/10 வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.
- திவ்யா தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
திமுகவில் இணைந்துள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அவ்வகையில் திவ்யா சத்யராஜ் அண்மையில் அவரிடம் 2 கேள்விகளை கேட்டிருந்தார். ஒன்று, அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? அடுத்த கேள்வி நீங்கள் கொள்கை தலைவராக பெரியாரை வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெண்களை இப்படி தப்பா பேசுறாங்க, இதை சகித்துக்கொள்ள முடியாது என்று பேசியிருந்தார். திவ்யாவின் கேள்விகளுக்கு த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், விஜயின் தீவிர ரசிகரான சிபி சத்யராஜ் தனது அப்பா நடித்த அரசியல் படமான அமைதிப்படை படத்தின் காட்சியை பகிர்ந்து தனது சகோதரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அமைதிப்படை படத்தில் மணிவண்ணனிடம் பேசும் சத்யராஜ், 'மணியா வரலாறை தெரிஞ்சுக்க' என வசனத்தை வைத்து விட்டு விஜய் இதுவரை செய்த உதவிகள் தொடர்பான வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.
- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மரபணு சோதனை.
- நீதிமன்ற விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திருமணம் செய்து ஏமாற்றியதாக, ஜாய் கிரிசில்டா கூறிய புகாரின் தொடர்ச்சியாக பெண் தொடர்ந்த வழக்கில் பிரப சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபணு பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மரபணு சோதனை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்ஏ பரிசோதனையின் அறிக்கையை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கிய நீதிமன்ற விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற டாடா படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர் தற்போது நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் கார்த்திக்-இன் 19-ஆவது திரைப்படம் ஆகும்.
பலக்கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வருகிற மார்ச் 6-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரில் பச்சை மற்றும் நீல நிற கொடியின் மீது கவுதம் ராம் கார்த்திக் 19 என்பதை குறிக்கு்ம வகையில், "GRK #19" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கவுதம் ராம் கார்த்திக் மற்றும் டாடா இயக்குநரின் புதிய கூட்டணியுடன் இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டைட்டில் டீசரைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் வெளியான சில நாட்களில் ரூ. 22 கோடிக்கும் அதிக வசூல் செய்துள்ளது.
வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தாய் கிழவி வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசனத்தை கூறி தாய் கிழவி படத்தை அனைவரும் பார்க்க சொல்லி படக்குழு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
- இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர். பி. பாலா தயாரிக்கும் படம், 'கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்கும் இப்படத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.
'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 'கொலைச்சேவல்' படம் வருகிற 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீடு தொடர்பான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும். நம் ஆனந்தம், துயரம், சொல்ல முடியாத ஏக்கம் — எல்லாவற்றிலும் அவை ஒலித்துக்கொண்டே இருக்கும். வாணி ஜெயராம் அவர்களின் குரல் அப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம்.
அவர் மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவாக, "விஸ்வராகாம் பாகம் 2" ஒரு பணிவான நினைவஞ்சலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இசையில் அவர் வெளிப்படுத்திய அதே நயமும், உண்மையும், இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு நொடிகளிலும் பிரதிபலிக்கின்றன.
இந்த இசைத் தொகுப்பின் மையத்தில், தென்னிந்திய சினிமாவின் உணர்ச்சிப் பிம்பத்தை உருவாக்கிய மகா இசையமைப்பாளர் M. S. விஸ்வநாதன் (MSV) அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தலைமுறைகளைத் தாண்டி வாழும் அவரது மெட்டுகள், இன்றும் நினைவுகளில் இசைக்கின்றன. இந்த நினைவஞ்சலி, இந்த இரு இசை மகத்துவங்களின் நிலைத்த பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், கருத்தாக்கம், எழுத்து, தயாரிப்பு ஆகிய அனைத்தையும் சுமதி ராம் மிகுந்த அக்கறையுடன் வடிவமைத்துள்ளார்.
இந்தத் தொகுப்பில், வாணி ஜெயராமின் ஆன்மாவைத் தொடும் பாடல்களை மற்றொரு இசை மாமன்னன் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் அழகாக சமநிலைப்படுத்துகிறது. அவரது பாடல், இசைக்கு மேலும் ஆழத்தையும் நிறைவும் சேர்க்கிறது. இந்த முழு இசை அனுபவமும் MSV அவர்களின் கைத்தேர்ந்த இசையமைப்பின் கீழ் ஒரே ஓட்டமாக ஒன்றிணைகிறது.
விஸ்வராகம் பாகம் 2 ஹைக்கூ பாணியில் அமைந்த இசை வடிவங்களாக விரிகிறது. சுருக்கமான இந்தப் படைப்புகள், மெட்டுக்கும் மௌனத்துக்கும் இடையே ஒரு நுண்ணிய, அழகான சமநிலையை உருவாக்குகின்றன.
இந்த ஆல்பம், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மறைமயமான துறவி-புனிதர் மீராபாய் அவர்களின் வாழ்க்கையும் தெய்வீகக் காதலும் குறித்து ஆராயும் ஒரு இசைப் பயணமாக அமைந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு சிறப்புமிக்க இசையமைப்பாளருடன் இணைந்து, இந்த ஆல்பம் நவீன பக்தி ஒலிச்சூழலின் மூலம் பக்தியை வெளிப்படுத்த முயல்கிறது.
விஸ்வராகம் – பாகம் 2 தற்போது யூடியூப், ஸ்பாடிஃபை மற்றும் டீசெர் தளங்களில் கிடைக்கிறது. வாணி ஜெயராமின் அபூர்வமான குரலுக்கான மரியாதை அஞ்சலியாக மட்டுமல்லாமல், உயர்ந்த இடத்தைப் பெறும் இசை உருவாக்க மரபிற்கும் மரியாதை செலுத்தும் நோக்கில், மாதந்தோறும் புதிய வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சில குரல்கள் ஒருபோதும் மறைவதில்லை என்பதை, கலை அனைவருக்கும் அனுபவிக்கத் தக்கதாக நிரந்தரமாக நிலைக்கும் என்பதை, மற்றும் இசை மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது என்பதையும் இந்த இசைத் தொகுப்பு நமக்கு நினைவூட்டுகிறது.
இத்தகைய காலகட்டங்களில், இசை என்ற உலகளாவிய மொழியின் வழியாக நாம் பகிரக்கூடிய அன்பையும், நாம் பரப்பக்கூடிய கருணையையும் எந்நேரமும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையும் இந்த படைப்பு வலியுறுத்துகிறது.
- வர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி ஹோலி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படத்தை நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளனர்.
- வருண்தவான் தனது மனைவி நடாஷா தலாலுடன் கொண்டாடினார்.
வடமாநிலத்தவர்களின் புனித பண்டிகையான ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் குடும்பத்தோடும், நண்பர்களோடும் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். வர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி ஹோலி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படத்தை நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளனர்.
விக்கி கவுசல்- கத்ரீனா கைப், வருண் தவான், கிருதி சனோன் ஆகியோர் ஹோலி புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். கத்ரீனா கைப் கணவர் விக்கி கவுசல், மைத்துனர் சன்னி மற்றும் சகோதரி இசபெல் கைப்புடன் கொண்டாடினார்.
கிருதி சனோன் பெற்றோர் சகோதரியுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் குடும்பத்தில் இருந்து உங்களுக்கு ஹோலி வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். வருண்தவான் தனது மனைவி நடாஷா தலாலுடன் கொண்டாடினார். மேலும் ரன்பீர் கபூர், ஊர்மிளா மடோன்கர், அலிபசல், ரிச்சாதத்தா, ஷபானா ஆஸ்மி உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.






