என் மலர்
சினிமா செய்திகள்
- சாரா இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.
- புதிய பட வாய்ப்புகள் சாராவை நோக்கி படையெடுக்கின்றன.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'தெய்வதிருமகள்'. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜூன்.
தற்போது கதாநாயகியாக உருவெடுத்துள்ள சாரா அர்ஜூன் 'துரந்தர்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாரா இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் சாராவை நோக்கி படையெடுக்கின்றன.
இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறுகையில், 'சாரா எனக்கு மகள் போன்றவர். பெற்றோரிடம் இருப்பதைவிட என்னிடம் அதிகமாக இருந்தவர். வாரத்திற்கு ஒரு முறையாவது இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். 'துரந்தர்' படத்தை பார்த்து விட்டு சாராவிடம் அப்பா, அம்மா பெருமை அடைந்திருப்பார்களே?' என கேட்டேன். அதற்கு சாரா 'நீங்களும் பெருமையடைந்திருப்பீர்களே?' என கேட்டார். 'அவளை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.
- எனக்கு கிரேடு 1 மார்பக புற்றுநோய் இருப்பதாக பெற்றோரிடம் சொல்லும் தைரியம் எனக்கு கிடைத்தது.
- சிகிச்சைக்கு பின் தற்போது நான் நன்றாக குணமடைந்து வருகிறேன்.
கமல்ஹாசன் நடித்த 'தக் லைப்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஜ்ஸ்ரீதேஷ்பாண்டே. தொடர்ந்து இந்தி, மலையாளம், மராத்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'வழக்கமான உடல்பரிசோதனையின் போது எனக்கு கிரேடு 1 மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கண்டறியப்பட்டதால் சிகிச்சை எளிதானது. இதை படிக்கும் அனைவருக்கும் சொல்ல வேண்டிய நேரம் இது. எனக்கு கிரேடு 1 மார்பக புற்றுநோய் இருப்பதாக பெற்றோரிடம் சொல்லும் தைரியம் எனக்கு கிடைத்தது. சிகிச்சைக்கு பின் தற்போது நான் நன்றாக குணமடைந்து வருகிறேன். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவேன்' என பதிவிட்டுள்ளார்.
- அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி பாய்ஸ்' தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- சூப்பர் ஹீரோக்கள் வில்லன்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதே இந்த தொடரின் ஒன்லைன்.
2019-ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி பாய்ஸ்' தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஹீரோக்கள் வில்லன்களாக இருந்தால் எப்படி இருக்கும் என வித்தியாசமான யோசனையில் உருவான இந்த தொடர் பெரும் வெற்றி பெற்று அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி சக்கை போடு போட்டது.
சூப்பர்மேன் பவர் கொண்ட ஹோம்லேண்டர் என்ற வில்லனை கொலை செய்ய பில்லி பட்சர் என்ற டீம் முயற்சிப்பதே இந்த தொடரின் முக்கிய ஒன்லைன்.
இந்நிலையில், 'தி பாய்ஸ்' தொடரின் இறுதி சீசன் ஏப்ரல்-8 வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த் சீசனிலாவது ஹோம்லேண்டர் கொல்லப்படுவாரா என்று தி பாய்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் இடஙக தொடரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம், அது தவறில்லை.
- திரைத்துறையை சார்ந்தவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம்.
நடிகர் சத்யராஜுக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சத்யராஜ் நீங்கள் யார் தியாகியா? அரசியல்வாதியா? திரைப்பட நடிகரா? சினிமா தொழிலில் இருந்து கொண்டு நடிகர்களை இனி மேலும் சிறுமைப்படுத்தி பேசாதீர்கள். உங்கள் மகளுக்கு தி.மு.க.வில் பதவி கிடைத்தது எப்படி? தியாகி சத்யராஜ் மகள் என்ற முறையிலா கிடைத்தது? பிரபல நடிகர் மகள் என்ற முறையில் தான் உங்கள் மகளுக்கு பதவி கிடைத்தது. உங்களை மேடையில் உட்கார வைத்ததின் காரணம் என்ன?
மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவரா? இல்லை மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியா? உங்களை மேடை ஏற்றியதற்கான தகுதி என்ன? நீங்கள் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று ஒரே காரணம்தான். ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம், அது தவறில்லை.
நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள். இந்த கருத்து உங்கள் முகத்திற்கு முன்னேயும் திரும்பும். திரைத்துறையை சார்ந்தவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் எந்த துறை, எந்த தொழில் நமக்கு சோறு போட்டதோ அந்த தொழிலுக்கு எதிராக இருக்கக் கூடாது. இன்னொன்று சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் போட்டியே வராது. ஏனென்றால் சனாதனம் என்பது சமூக நீதிதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சத்யராஜ் குறித்து பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.
- கெணத்த காணோம் படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
- யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார்.
நடிகர் யோகி பாபு புதிதாக நடிக்க உள்ள படம் 'கெனத்த காணோம்'. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை 'ஒரு கிடாவின் கருணை மனு', 'சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
இந்நிலையில், 'கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட உள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் `லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலாக "ஆடினே இருப்பேன்" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்தது.

இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படம் வருகிற மார்ச் 27-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் பின்னணி வேலைகளின் போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆர்.ஜே. பாலாஜி படத்தில் இருந்து விலகியதாகவும், படத்தின் பின்னணி வேலைகளை முடித்து, ரிலீசுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு "டேய் சும்மா இருடா" என்று இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மீம்ஸ்-ஐ பகிர்ந்துள்ளார்.
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இருவரது திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.
- விழாவில் தென்னிந்திய திரை உலகத்தினர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து இருவரது திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. விழாவில் தென்னிந்திய திரை உலகத்தினர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி

விழாவில் சரத்குமார், ராதிகா, கார்த்தி, சிரஞ்சீவி, நாகார்ஜூனா, அமலா, வெங்கடேஷ், நானி, ஸ்ரீகாந்த், அவரது மனைவி சிவரஞ்சனி, ராம்சரண், அல்லு அர்ஜூன், ராணா, நவீன் பாலி ஷெட்டி, ரவி தேஜா, நாகசைதன்யா, நடிகைகள் கிருத்தி ஷெட்டி, மிருணாள்தாக்கூர் உள்பட ஏராளமானோர் பங்கேற்று விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
- 'சிக்ஸ் பேக்' வைக்க நிறைய தியாகம் செய்யவேண்டும்.
- சிக்ஸ் பேக் வைக்க மெனக்கெட வேண்டும்.
சிக்ஸ் பேக் என்பது விபரீதமான முயற்சி தான். இதை பலமுறை நான் வலியுறுத்தி பேசியுள்ளேன். இதை தயவுசெய்து யாரும் முயற்சி பண்ணாதீங்க... இதில் உடல் கடுமையாக பாதிப்படையும்.
முன்னணி நடிகரான பரத், '555' படத்துக்காக கடும் உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் சிக்ஸ் பேக் முயற்சியை யாரும் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பரத் கூறும்போது, 'சிக்ஸ் பேக்' வைக்க நிறைய தியாகம் செய்யவேண்டும். நமது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும். எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மெனக்கெட வேண்டும்.
நிச்சயம் நான் 'சிக்ஸ் பேக்' வைத்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், ஒருதடவை முயற்சி செய்து, அதை நடத்திக்காட்டி விட்டு, அத்துடன் அதை விட்டுவிடுங்கள். அதை தொடரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உடலுக்கு நல்லது கிடையாது. '555' படத்துக்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கோழிக்கறி, முட்டை, உலர் திராட்சை, பிஸ்கெட் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தேன். எனவே 'சிக்ஸ் பேக்' முயற்சி வேண்டாம்" என்று குறிப்பிட்டார்.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் பயணம் செய்தவர்கள், வான்வெளி மூடப்பட்டுள்ளதால் இருந்து திரும்ப முடியாமல் பலர் சிக்கித் தவிக்கின்றனர். போர் சூழல் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் செய்வதறியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போர் காரணமாக துபாயில் சிக்கித்தவிப்பவர்களுக்கு பிரபல நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாயில் தங்க இடமின்றி தவிப்பவர்கள் தன்னை தொடர்பு கொண்டால், பாதுகாப்பான தங்குமிட வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த X தளப் பதிவில் அவர், "போர் காரணமாக பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்குவதற்கு இடம் இல்லையென்றால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறோம்.
தேச பேதம் கிடையாது, நிபந்தனைகள் இல்லை. மனிதாபிமானம் மட்டும் போதும். உதவி தேவைப்பட்டால் இன்ஸ்டாகிராமில் @dugastaproperties எங்களுக்கு DM அனுப்புங்கள். தேவைப்படும் ஒருவரைச் சென்றடைய இதைப் பகிரவும்," என குறிப்பிட்டுள்ளார்.
- நான் என்ன உடை அணிந்தால் யாருக்கு என்ன பிரச்சினை?
- இவர்களின் மனநிலை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போகிறது.
இந்தி மொழி சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஆயிஷா கான், பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 'ஜாட்'. 'கிஸ் கிஸ்கோ பியார் கரூன்-2' படங்களில் நடித்தார். துரந்தர் படத்தில் இவரது வளைவு நெளிவான ஆட்டமும் பேசப்பட்டது.
இதற்கிடையில் தினந்தோறும் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் பகீர் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் என் உடல் அங்கங்கள் பற்றி குறிப்பிட்டு, பாலியல் ரீதியாக பேசுகிறார்கள். நான் என்ன உடை அணிந்தால் யாருக்கு என்ன பிரச்சினை? இவர்களின் மனநிலை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போகிறது. தரக்குறைவான விமர்சனங்களை பேசும்போது, அது சம்பந்தப்பட்டவரின் மனதை காயப்படுத்துமே என்று யோசிக்க மாட்டார்களா...
அந்தவகையில் எனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அந்த மோசமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பிரபலமாக இருப்பதால் இவ்வளவு காயத்தை சந்திக்க வேண்டுமா? என்ற யோசனை, ஒவ்வொரு நாளும் என்னை பய முறுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.






