என் மலர்
சினிமா செய்திகள்
ஆர்.பி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், `கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி.ஆர். துதிவாணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார். `கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, 'கொலைச்சேவல்' திரைப்படம் மார்ச் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி `கொலைச்சேவல்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், அதிர்ச்சியாலும் குற்ற உணர்ச்சியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார். தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுவதற்கும் தானே காரணம் என்று எண்ணும் அவர், தற்கொலை முயற்சிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்.
அந்த நேரத்தில், துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா அவரை ஆறுதல் கூறி உண்மையை புரிய வைக்க முயற்சிக்கிறார். அப்போது தனது திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் குறித்து பேசும் நிவேதிதா, தன் கணவரை தானே கொன்றதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
நிவேதிதா சதீஷ் கணவரை கொன்றதாக சொல்ல காரணம் என்ன? அவரது கணவர் இறப்பின் உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ், பலமான கதாபாத்திரம் இருந்தும் தனது நடிப்பில் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காதலன் மற்றும் கணவர் இடையே சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், உண்மை வெளிவரும் முக்கியமான தருணங்களில் அவர் வெளிப்படுத்த வேண்டிய பதற்றம், பயம் போன்ற உணர்வுகள் குறைவாக இருப்பதால் அந்த காட்சிகளின் தாக்கம் குறைந்து விடுகிறது.
நிவேதிதாவின் முன்னாள் காதலனாக சிபி சந்திரன் மற்றும் கணவராக அதுல் நடித்துள்ளனர். இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவில் நடித்துள்ளனர். குறிப்பாக அதுல், அதிகமாக நடிக்கக்கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் நாசர் படத்தில் கவனம் ஈர்க்கிறார். துறவறம் பூண்ட சகோதரியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி அமைதியான நடிப்பால் கதைக்கு தேவையான சமநிலையை தருகிறார்.
இயக்கம்
மனித வாழ்க்கையில் பல சம்பவங்கள் தற்செயலாகவே நடக்கின்றன என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன். ஆனால், அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் சொல்லாமல், மிகவும் மெதுவாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
இசை
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், கதையில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.
ரேட்டிங்-2.5/5
பொறியியல் பட்டதாரியான நாயகன் ஸ்ரீதேவா, பலரிடமிருந்து பல லட்சங்கள் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல் தப்பித்து வருகிறார். எங்கு சென்றாலும் கடன்காரர்கள் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, சிறு வயதிலிருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகி நிவேதா, அதற்காக எவ்வளவு பணம் செலவாகினாலும் தயாராக இருக்கிறார்.
இந்த ஆசையை தெரிந்து கொண்ட ஸ்ரீதேவா, அதையே வாய்ப்பாக பயன்படுத்தி அவரிடம் பொய் சொல்லி பணம் வாங்க திட்டமிடுகிறார். நட்பாக தொடங்கும் அவர்களின் பழக்கம், நம்பிக்கையாக மாறும் தருணத்தில், நாயகனின் உண்மை முகம் நிவேதாவுக்கு தெரிய வருகிறது.
இதனால் கோபமடையும் அவர், போலீஸ் ஆன பிறகு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இறுதியில் நிவேதா நினைத்தது நடந்ததா? ஸ்ரீதேவா எதற்காக இத்தனை கடன் வாங்கினார்? கடனை அடைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
சின்னத்திரை மற்றும் துணை வேடங்களில் நடித்துப் பழகிய ஸ்ரீதேவா, நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். அப்பாவியான முகம், நம்ப வைக்கும் பொய் பேச்சு, இயல்பான உடல்மொழி என கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிவேதா, புதுமுகம் என்றாலும், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்.
நாயகியின் தந்தையாகவும், வில்லன் வேடத்திலும் வரும் வேல ராமமூர்த்தி, வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார். நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் சரவண சக்தி, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள், கதையை நகர்த்த உதவுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இயக்கம்
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வேல் குமரேசன். பழைய பாணியிலான கமர்ஷியல் கதையை அதே பழைய பாணியிலேயே சொல்லியிருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அதற்கேற்ற வலுவான துணை நட்சத்திரங்கள் இல்லாதது வருத்தம்.
ஔிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஆர். எண். சிவகுமார், குறைந்த முதலீட்டுக்குள் தரமான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
இசை
பரணி இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரகத்தில் உள்ளன. பின்னணி இசை காட்சிகளோடு சேர்ந்து பயணிக்கிறது.
ரேட்டிங்-2/5
தமிழ் திைரயுலகில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் தற்போது நடிகர் சூர்யா, தனுஷ், அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய இன்டீ பாடல் "பவழ மல்லி" சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பாடல் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர், "நான் எனது முதல் திரைப்படத்தில் இணையும் முன்பே, இயக்குநர் அட்லி அண்ணா என்னிடம் தனது அடுத்த படத்தில் பணியாற்றுகிறாயா என கேட்டார். இது தொடர்பான சந்திப்பின் போது நான் இசையமைத்த பாடலை அட்லி அண்ணா கேட்டார். பாட்டை கேட்டு முடித்ததும், என் அடுத்தப் படத்திற்கு இசையமைக்கிறாயா என கேட்டார்.
பாட்டை கேட்டதும், சற்றும் யோசிக்காமல் அவர் கேட்டது என்னை மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை, என் மீது எனக்கிருந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. அட்லி அண்ணாவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.
கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற டாடா படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர் தற்போது நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தினா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் கார்த்திக்-இன் 19-ஆவது திரைப்படம் ஆகும்.
பலக்கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரின் படி இந்தப் படம் கொடி கம்பம் வைப்பதில் ஏற்படும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளை பேசும் என்று தெரிகிறது. கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் அவரது 19-வது திரைப்படத்திற்கு "ப்ளடி பாலிடிக்ஸ்" என தலைப்பிடப்பட்டுள்ளது.
கவுதம் ராம் கார்த்திக் மற்றும் டாடா இயக்குநரின் புதிய கூட்டணியுடன் இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இயக்குநர் ராஜூமுருகன் வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பிரதீப் காளிராஜா மேற்கொள்ள, தீபக் எஸ் படத்தொகுப்பு பணிகளையும், அபிஷேக் ஸ்ரீனிவாஸ் சண்டைப்பயிற்சி கொடுத்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை யுகபாரதி, கணேஷ் கே பாபு மற்றும் சௌமியா பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
- நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்தை இசையமைத்துள்ளார்.
- ‘கெணத்த காணோம்’ படம் வருகிற 13-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் யோகி பாபு புதிதாக நடித்துள்ள படம் 'கெணத்த காணோம்'. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை 'ஒரு கிடாவின் கருணை மனு', 'சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதனிடையே, 'கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, 'கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். டிரெய்லரில் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் கிராமத்தில் கோவில் பூசாரியாக நடித்துள்ளார் யோகி பாபு. தண்ணீருக்காக தோண்டப்படும் குழியால் ஏற்படும் பிரச்சனை காரணமாக ஊரே காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அது எதனால்? அதன்பின் நடைபெறும் சம்பங்களே படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 'கெணத்த காணோம்' படம் வருகிற 13-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'கான் சிட்டி' படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ள படம் 'கான் சிட்டி' (Con City). இப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புதுமையான கதைக்களத்துடன் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் 'கான் சிட்டி' படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
டீசரில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடனில் சிக்கித்தவிக்கும்போது அவரது கையில் பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று தென்படுகிறது. இந்த இயந்திரம், கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கிடைக்க இதன்பின் நடைபெறும் சம்பவங்களே காணப்படுகிறது.
டீசரை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜித்தின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா? ரசிகர்கள் உற்சாகம்
- அஜித்குமாரின் 65-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளது தெரிந்த கதை. இது அஜித்குமார் நடிக்கும் 64-வது படமாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அஜித்குமாரின் 65-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் ஏற்கனவே 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கிடையில் அஜித்குமாரின் 66-வது படத்தை வெங்கட்பிரபு இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் 2011-ம் ஆண்டில் மங்காத்தா படம் வெளியாகி ஹிட் அடித்தது. சமீபத்தில் கூட இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் பார்த்தது.
இதற்கிடையில் அஜித் - வெங்கட்பிரபு கூட்டணியில் புதிய படம் உருவாகலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
- இப்படத்தில் லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வரும் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'கார்மேனி செல்வம்'. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
'கார்மேனி செல்வம்' படத்தில் லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, அர்ஜுனன், சங்கர நாராயண் வி, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு பணத்தின் மீது பேராசை ஏற்பட இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள 'கார்மேனி செல்வம்' படம் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
- இப்படத்தின் பூஜை விழாவில் ரவி மோகன், யோகி பாபு, கெனிஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் 'ரவி மோகன் ஸ்டூடியோல்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதன் முறையாக ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பின் படம் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், தான் தயாரிக்கும் படத்தில் இயக்குநராக நடிகர் ரவி மோகன் உருவெடுத்துள்ளார். அப்படத்திற்கு 'ஆன் ஆர்டினரி மேன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றன.

'ஆன் ஆர்டினரி மேன்' படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை விழாவில் ரவி மோகன், யோகி பாபு, கெனிஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் 'ப்ரோ கோட்' எனும் மற்றொரு படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜூன், அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பவழ மல்லி பாடலை விவேக் எழுத, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.
- சாய் அபயங்கருடன் சேர்ந்து கயாடு லோஹர் நடனமாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் சமீபத்தில் வெளியான பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இதுதவிர மேலும், சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர் தனது அடுத்த இன்டீ பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
"பவழ மல்லி" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடலை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் சாய் அபயங்கருடன் சேர்ந்து கயாடு லோஹர் நடனமாடியுள்ளார்.
- மனிதன் தெய்வமாகலாம் படத்தை விஜயா சதீஷ் தயாரிக்கிறார்.
- செல்வராகனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை குஷி ரவி நடிக்கிறார்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் செல்வராகனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை குஷி ரவி நடிக்கிறார். மேலும், வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.
இந்நிலையில், 'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.






