சாய் அபயங்கரின் 'பவழ மல்லி' பாடலை வெளியிட்ட சிம்பு

பவழ மல்லி பாடலை விவேக் எழுத, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.சாய் அபயங்கருடன் சேர்ந்து கயாடு லோஹர் நடனமாடியுள்ளார்.
சாய் அபயங்கரின் 'பவழ மல்லி' பாடலை வெளியிட்ட சிம்பு
Published on: 

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் சமீபத்தில் வெளியான பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இதுதவிர மேலும், சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர் தனது அடுத்த இன்டீ பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

"பவழ மல்லி" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடலை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் சாய் அபயங்கருடன் சேர்ந்து கயாடு லோஹர் நடனமாடியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com