செல்வராகவன் நடிக்கும் 'மனிதன் தெய்வமாகலாம்' படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்

மனிதன் தெய்வமாகலாம் படத்தை விஜயா சதீஷ் தயாரிக்கிறார்.செல்வராகனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை குஷி ரவி நடிக்கிறார்.
செல்வராகவன் நடிக்கும் 'மனிதன் தெய்வமாகலாம்' படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்
Published on: 

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் செல்வராகனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை குஷி ரவி நடிக்கிறார். மேலும், வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.

இந்நிலையில், 'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com