என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆஸ்கார் போட்டியில் 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு ஆஸ்கார் போட்டியில் 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

    ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

    ஆஸ்கார் விருதை வழங்குபவராக பிரியங்கா தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

    பிரியங்கா சோப்ரா நடித்த The Bluff என்ற ஹாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இதற்கிடையே ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். 

    • துரந்தர் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    இதையடுத்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    சந்தானத்திற்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார்.

    திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சந்தானம் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்.

    இந்த நிலையில் இயக்குநர் சுதமான் கிருஷ்ணா எழுதி, இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

    K7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே செல்லையா மற்றும் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் டைம் லூப் சார்ந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பூஜை படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். இதுதொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜய், சங்கீதா கூறியது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில் நேற்று முன்தினம் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் திரிஷாவுடன் வந்தது அமைந்தது. இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, த.வெ.க.வின் மகளிர் தின விழா குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அமீர் வாட்ஸ்அப் ஸ்டேடசில், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா என விமர்சித்துள்ளார்.

    தற்போது அமீர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • தற்போது தெலுங்கில் வரிசைகட்டி படங்கள் நடித்து வருகிறார்.
    • வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மீனாட்சி சவுத்ரி, தமிழில் 'கொலை', 'சிங்கப்பூர் சலூன்', 'தி கோட்' படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் வரிசைகட்டி படங்கள் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது வருங்கால கணவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் குறித்து மீனாட்சி சவுத்ரி பேசியது வைரலாகி இருக்கிறது.

    அதில் அவர், "என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.

    சிம்பிளாக சொல்லணும்னா... அம்மணி வீட்டோட மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறார் போலும்.

    • முஸ்தபா முஸ்தபா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • அந்த வீடியோவை எப்படியாவது இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார் சதீஷ்

    நடிகர் சதீஸ் நடிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவான முஸ்தபா முஸ்தபா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் சதீஷ், டாக்டராக இருக்கும் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இரு குடும்பங்களும் இந்த காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிறது.

    இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், அந்த வீடியோவை எப்படியாவது இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார் சதீஷ். இறுதியில் சதீஷின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.

    இந்நிலையில், முஸ்தபா முஸ்தபா பட விழாவில் பேசிய நடிகர் சதீஷ், "முஸ்தபா முஸ்தபா என்ற தலைப்பு மாதிரி ஈரானும் இஸ்ரேலும் அமெரிக்காகவும் முஸ்தபா முஸ்தபா பாடல் பாடி ஒன்று சேரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று தெரிவித்தார். 

    • நேற்று டெக்ஸ்லா படத்தின் பூஜை நடைபெற்றது.
    • டெக்ஸ்லா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

    3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது டெக்ஸ்லா என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

    கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் 9வது படமான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் ஜெய், சுராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர்களை ஜெய் வெளியிட்டுள்ளார். 

    இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    `அசுரன்', `விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். இதுதவிர சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கும் கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

     

    `யூத்' படத்தின் `முட்ட கலக்கி,' `பறந்தேனே பெண்ணே' மற்றும் `ஆச புள்ள' பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், `யூத்' திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி யூத் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாக இருக்கிறது.

    கென் கருணாஸ் எழுதி, இயக்கி இருக்கும் யூத் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிடுகிறார். டிரெய்லர் நாளை (மார்ச் 7) மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இது குறித்து படக்குழு சார்பில் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு கமர்ஷியல் அம்சங்களுடன் கதை உருவாகியுள்ளது.

    ஊரில் மாடுகளை காப்பாற்றி அவற்றை பராமரிக்கும் மனிதராக நரேன் வாழ்கிறார். அவரைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவராக அவரது மகன் விமலும் இருக்கிறார். அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு கன்றைக் காப்பாற்றி வளர்க்கும் விமல், அதற்கு பயிற்சி அளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக உருவாக்குகிறார். பல ஆண்டுகளாக யாராலும் அடக்க முடியாத காளையின் உரிமையாளராக அவர் பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்.

    இதற்கிடையே, விமல் ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளி வருகிறார். அவரை கொலை செய்ய பலர் முயற்சிப்பதும், வாழ்க்கையில் பல பகைகள் உருவாகுவதும் கதைக்கு திருப்பங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாயகி சனஷ்கா ஸ்ரீயின் காதல் விமலின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை தருகிறது. ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை மீண்டும் சிக்கலாக்குகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விமல் எப்படி மீள்கிறார்? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் சாதிக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    மாடுகள் மீது பாசம் கொண்ட இளைஞராக விமல் வழக்கமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாஸ் ஹீரோ போல காளையை அடக்கும் வீரராக இல்லாமல், காளையின் உரிமையாளராக கெத்து காட்டும் கதாபாத்திரம் அவருக்கு வேறுபட்டதாக அமைந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள சனஷ்கா ஸ்ரீ அழகாக தோன்றுவதோடு, சில முக்கியமான காட்சிகளில் தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

    முனீஷ்காந்த் நடித்திருக்கும் குணச்சித்திர வேடம் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நட்டி நட்ராஜ் தனது வலுவான நடிப்பால் கதாபாத்திரத்தை சிறப்பாக எடுத்துச் செல்கிறார். நரேன், தீபா சங்கர், பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

    இயக்குநர்

    வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு கமர்ஷியல் அம்சங்களுடன் கதையை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கேந்திரன். நாயகனை சுற்றி நடக்கும் பகைமை மற்றும் உறவுகளை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியுள்ளார். சில இடங்களில் பழைய படங்களின் சாயல் இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இயக்கி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு மற்றும் இசை

    ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் மஞ்சுவிரட்டு காட்சிகளை இயல்பாக பதிவு செய்திருக்கிறார். டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

    இந்தப் படத்தில் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் `புருஷன்.' இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைெபற்று வரும் நிலையில், படக்குழு சார்பில் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    புருஷன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் X தளத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவில் இயக்குநர் சுந்தர் சி, தமன்னா, விஷால், யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் படம் பற்றி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.



    இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

    திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சந்தானம் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்.

    இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. K7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே செல்லையா மற்றும் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படம் டைம் லூப் சார்ந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.

    இந்தப் படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சுதமான் கிருஷ்ணா எழுதி, இயக்கும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை ரிச்சர்ட் எம் நாதன் மேற்கொள்ள பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை ஜேக்சன் மேற்கொள்ள திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி அளிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.



    இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.

    ஆர்.பி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், `கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி.ஆர். துதிவாணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார். `கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, 'கொலைச்சேவல்' திரைப்படம் மார்ச் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி `கொலைச்சேவல்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். 



    ×