என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
    • இசை நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த மீசைய முறுக்கு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

    இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்றது.

    அப்போது எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற எதிர்நீச்சல் அடி பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடினார். அப்போது திடீரென மேடையில் தோன்றிய அனிருத் அவருடன் இணைந்து அப்பாடலை பாடினார். இதனால் இசை நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அல்லு அர்ஜூன் குடும்ப திருமண விழா நடைபெற்றது.

    இந்திய திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தன. இந்த வரிசையில், நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது இயக்குநர் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் நடிக்கிறார்.

    சமீபத்தில் அல்லு அர்ஜூன் குடும்ப திருமண விழா நடைபெற்றது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அல்லு ஸ்னேகா ரெட்டி தம்பதி தங்களது 15-வது திருமண நாளை கொண்டாடினர்.

    திருமண நாளை ஒட்டி நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனைவிக்கு ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. காரை பரிசளித்துள்ளார். இது தொடர்பாக அல்லு அர்ஜூன் தரப்பில் வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அல்லு அர்ஜூன் பரிசளித்துள்ள ஆடம்பர காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது.




    இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    `அசுரன்', `விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். இதுதவிர சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கும் கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

    `யூத்' படத்தின் `முட்ட கலக்கி,' `பறந்தேனே பெண்ணே' மற்றும் `ஆச புள்ள' பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், `யூத்' திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். இன்று மாலை வெளியாக இருந்த நிலையில், டிரெய்லர் ரிலீஸ் சில மணி நேரங்கள் தாமதமாகி இருக்கிறது.

    கென் கருணாஸ் எழுதி, இயக்கி இருக்கும் யூத் திரைப்படத்தின் டிரெய்லரை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நடிகர் சிலம்பரசன், "யூத் திரைப்படத்தின் டிரெய்லரை புத்துணர்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வழங்குவதில் மகிழ்ச்சி!

    இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் கென் கருணாஸ் தம்பிக்கு வாழ்த்துக்கள். இவ்வளவு இளம் வயதிலேயே நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டையும் பொறுப்பேற்று இருப்பது பாராட்டுக்கு உரியது. நீங்கள் எதிர்காலத்தில் பெரிய உயரங்களை அடைய வாழ்த்துகிறேன். முழு குழுவிற்கும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    ரீ-ரிலீஸ் ஆவதை திங்க் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா "பாக்கெட் நாவல்" படத்தை இயக்கி வருகிறார்.

    இந்த நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான "ஆரண்ய காண்டம்" திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆரண்ய காண்டம் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆவதை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இது குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

     

    இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கித்தில் வெளியான முதல் திரைப்படமான "ஆரண்ய காண்டம்" பல விருதுகளை வென்று குவித்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வெளியீட்டின் போது வெற்றி பெறாமல், பின்னர் மக்களால் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • பல திருப்பங்களின் மூலம் படத்தை இயக்குனர் விறுவிறுப்பாக நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தையும் படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

    ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66-வது எண் வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அதே குடியிருப்பில் 99-வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு உருவாகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள்.

    இந்நிலையில், பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போடுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரச்சிதா அதிலிருந்து தப்பித்து விடுகிறார். இதற்கிடையே ஒரு இரவு, ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதை ரச்சிதா பார்க்கிறார். அவரை காப்பாற்ற குடியிருப்புவாசிகளுடன் செல்லும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், 99-வது எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

    இறுதியில் ரச்சிதாவுக்கு மட்டும் தெரியும் ஸ்வேதா யார்? அவர் ஏன் ரச்சிதாவை சந்தித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, காதல் காட்சிகளிலும், ஆவி புகுந்த பிறகு வரும் ஆக்ரோஷமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். இருந்தாலும், அவரிடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான காட்சிகள் அதிகமாக இல்லாதது சற்று ஏமாற்றம் தருகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வரும் ஸ்வேதா, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் நல்ல மனம் கொண்ட பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார்.

    நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரத்தை சரியாக கையாள்கிறார்கள்.

    சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரின் காமெடி பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு ஓரளவு பலம் சேர்க்கின்றன.

    இயக்கம்

    கதை, திரைக்கதை, வசனம், இசை என அனைத்தையும் கவனித்துள்ள இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, வழக்கமான திகில் பாணியில் கதையை சொல்லியிருந்தாலும், பல திருப்பங்களின் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தையும் படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதோடு, மனிதர்கள் சாதி போன்ற தேவையற்ற பிரிவுகளை விட்டு மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற கருத்தையும் சுருக்கமாக பதிவு செய்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, ஒரே அடுக்குமாடி குடியிருப்பை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி ஒரே இடத்தில் நடக்கும் கதை என்ற உணர்வை குறைத்திருக்கிறார்.

    இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    `அசுரன்', `விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். இதுதவிர சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கும் கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

    `யூத்' படத்தின் `முட்ட கலக்கி,' `பறந்தேனே பெண்ணே' மற்றும் `ஆச புள்ள' பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், `யூத்' திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி யூத் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாக இருக்கிறது.

    கென் கருணாஸ் எழுதி, இயக்கி இருக்கும் யூத் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தப் படத்தின் டிரெய்லர் இதுவரை ெவளியாகவில்லை. இந்த நிலையில் டிரெய்லர் குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள யூத் படத்தின் தயாரிப்பு நிறுவனம், "தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக படத்தின் டிரெய்லர் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    உங்களை காத்திருக்க செய்ததற்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, உங்கள் பொருமையை பாராட்டுகிறோம். டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடுகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது.

    100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி ஓ.டி.டி. தளமான ZEE5-இல் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் "தடயம்", வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

    தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளில் இருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது அதன் வெற்றியை நிரூபிக்கிறது.

    இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். அப்்போது நடிகர் சமுத்திரகனி பேசும் போது, "ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். 'தடயம்' அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி.

    நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது," என்றார்.

    • அல்லு சிரிஷ்க்கு நேற்று ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
    • நைனிகா ரெட்டி என்பவரை அல்லு சிரிஷ் திருமணம் செய்துகொண்டார்.

    அல்லு அர்ஜுன் அவர்களின் சகோதரரும் நடிகருமான அல்லு சிரிஷ்க்கு நேற்று ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நைனிகா ரெட்டி என்பவரை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அல்லு சிரிஷ் திருமணம் செய்துகொண்டார்.

    இந்த திருமணத்தில் சிரஞ்சீவி, சூர்யா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், மனமக்களுடன் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படமும் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனுடன் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

    • தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
    • விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும்.

    நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

    விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது:-

    * படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.

    * விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும்.

    * பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.

    • நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்.
    • விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது.

    நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

    விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது:-

    * விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்.

    * விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும்.

    * விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது.

    * நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுவதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

    ஆஸ்கார் போட்டியில் 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

    98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு ஆஸ்கார் போட்டியில் 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

    ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

    ஆஸ்கார் விருதை வழங்குபவராக பிரியங்கா தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

    பிரியங்கா சோப்ரா நடித்த The Bluff என்ற ஹாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இதற்கிடையே ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். 

    • துரந்தர் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    இதையடுத்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    ×