என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    99/66 – விமர்சனம்
    X

    99/66 – விமர்சனம்

    • பல திருப்பங்களின் மூலம் படத்தை இயக்குனர் விறுவிறுப்பாக நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தையும் படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

    ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66-வது எண் வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அதே குடியிருப்பில் 99-வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு உருவாகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள்.

    இந்நிலையில், பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போடுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரச்சிதா அதிலிருந்து தப்பித்து விடுகிறார். இதற்கிடையே ஒரு இரவு, ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதை ரச்சிதா பார்க்கிறார். அவரை காப்பாற்ற குடியிருப்புவாசிகளுடன் செல்லும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதும், 99-வது எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

    இறுதியில் ரச்சிதாவுக்கு மட்டும் தெரியும் ஸ்வேதா யார்? அவர் ஏன் ரச்சிதாவை சந்தித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, காதல் காட்சிகளிலும், ஆவி புகுந்த பிறகு வரும் ஆக்ரோஷமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். இருந்தாலும், அவரிடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான காட்சிகள் அதிகமாக இல்லாதது சற்று ஏமாற்றம் தருகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வரும் ஸ்வேதா, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் நல்ல மனம் கொண்ட பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார்.

    நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரத்தை சரியாக கையாள்கிறார்கள்.

    சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரின் காமெடி பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு ஓரளவு பலம் சேர்க்கின்றன.

    இயக்கம்

    கதை, திரைக்கதை, வசனம், இசை என அனைத்தையும் கவனித்துள்ள இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, வழக்கமான திகில் பாணியில் கதையை சொல்லியிருந்தாலும், பல திருப்பங்களின் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கருத்தையும் படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதோடு, மனிதர்கள் சாதி போன்ற தேவையற்ற பிரிவுகளை விட்டு மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற கருத்தையும் சுருக்கமாக பதிவு செய்கிறார்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா, ஒரே அடுக்குமாடி குடியிருப்பை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி ஒரே இடத்தில் நடக்கும் கதை என்ற உணர்வை குறைத்திருக்கிறார்.

    Next Story
    ×