#YogiBabu நடித்துள்ள 'கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் கார்த்தி

கெணத்த காணோம் படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார்.
#YogiBabu நடித்துள்ள 'கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் கார்த்தி
Published on: 

நடிகர் யோகி பாபு புதிதாக நடிக்க உள்ள படம் 'கெனத்த காணோம்'. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை 'ஒரு கிடாவின் கருணை மனு', 'சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்நிலையில், 'கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com