என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்ஆர் பிரபு"
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் பின்னணி வேலைகளின் போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆர்.ஜே. பாலாஜி படத்தில் இருந்து விலகியதாகவும், படத்தின் பின்னணி வேலைகளை முடித்து, ரிலீசுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு "டேய் சும்மா இருடா" என்று இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மீம்ஸ்-ஐ பகிர்ந்துள்ளார்.
- ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில், "ரஜினிக்கு 72 வயது ஆன போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி உங்களுக்கும் நின்றால் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என" கலாநிதி மாறன் பேசினார்.

ரஜினி- எஸ்.ஆர்.பிரபு
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர். இதன் மதிப்பும் வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையை உயர்ந்து எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரைத்துறை. அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.






