வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் வெற்றிக் கொண்டாட்டம்... வீடியோ வெளியிட்ட தாய் கிழவி படக்குழு..!

தாய் கிழவி திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் வெற்றிக் கொண்டாட்டம்... வீடியோ வெளியிட்ட தாய் கிழவி படக்குழு..!
Published on

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் வெளியான சில நாட்களில் ரூ. 22 கோடிக்கும் அதிக வசூல் செய்துள்ளது.

வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தாய் கிழவி வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசனத்தை கூறி தாய் கிழவி படத்தை அனைவரும் பார்க்க சொல்லி படக்குழு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com