என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாதம்பட்டி ரங்கராஜூக்கு DNA பரிசோதனை- உயர் நீதிமன்றம் அனுமதி
    X

    மாதம்பட்டி ரங்கராஜூக்கு DNA பரிசோதனை- உயர் நீதிமன்றம் அனுமதி

    • சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மரபணு சோதனை.
    • நீதிமன்ற விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக, ஜாய் கிரிசில்டா கூறிய புகாரின் தொடர்ச்சியாக பெண் தொடர்ந்த வழக்கில் பிரப சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபணு பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மரபணு சோதனை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டிஎன்ஏ பரிசோதனையின் அறிக்கையை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மாதம்பட்டி ரங்கராஜூக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கிய நீதிமன்ற விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    Next Story
    ×