என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பருத்தி வீரனுக்கு பிறகு நான் நடிக்கும் நல்ல கதை உள்ள `பண்டிகை' என்று நடிகர் சரவணன் கூறியுள்ளார்.
    டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. `ரங்கூன்' படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன்.

    நடிகர் நிதின் சத்யா, நாயகி கயல் ஆனந்தி, எடிட்டர் பிரபாகர், கலை இயக்குனர் ரெமியன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் விக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
    தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகியான அறிமுகமாகியுள்ள ‘அதாகபட்டது மகாஜனங்களே’ படத்தில் நாயகியாக நடித்துள்ள ரேஷ்மா ரத்தோர் முன்னணி நடிகை போல் பந்தா காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    பிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகியான அறிமுகமாகியுள்ள படம் ‘அதாகபட்டது மகாஜனங்களே’. இப்படத்தில் கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, யோக் ஜேப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்பசேகர் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

    இப்படத்தின் கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் என்பவர் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். இந்நிலையில், முதல் படத்திலேயே முன்னணி நடிகைபோல் இவர் பந்தா காட்டுவதாக படக்குழுவினர் நடிகையை பற்றி குறைகூறியுள்ளார்.



    படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஒரு காட்சிக்கு இந்த உடைதான் பொருத்தமாக இருக்கும், அதை உடுத்தி வாருங்கள் என்று நடிகையிடம் சொன்னால், பதிலுக்கு அவரோ, அந்த உடைகள் எல்லாம் அணியமுடியாது. எனக்கேற்றார்போல் உடையணிந்துதான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பாராம்.

    தற்போது படம் முடிந்து படக்குழுவினர் அனைவரும் படத்தை புரோமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், நடிகையை புரோமோஷனுக்கு அழைத்தபோது, அவர் முன்னணி நடிகைகளைப் போல் புரோமோஷனுக்கெல்லாம் வரமுடியாது என கறாராக சொல்லிவிட்டாராம். இதனால், படக்குழுவினர் ரொம்பவும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.



    தமிழில் முதன்முதலில் அறிமுகமாகியுள்ள இந்நாயகி ஆரம்பத்திலேயே முன்னணி நடிகை போல் பந்தா காட்டுவது அவரது வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் வருகிற ஜுன் 30-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
    அஜய் ஞானமுத்து இயக்கி வரும் `இமைக்கா நொடிகள்' படத்தில் ஷங்கர் படத்தின் பிரபலம் ஓருவர் இணைந்திருக்கிறார்.
    `டிமான்ட்டி காலனி' படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் `இமைக்கா நொடிகள்'.  ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும், இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். நயன்தாரா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் மிரட்டல் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை `த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.



    ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அதில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றும் இடம்பெறுகிறது. ஹாங் காங்கின் பிரபல ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ அந்த ஸ்டண்ட் காட்சியை வடிவமைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த வெளியான `ஐ' படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியை இவர் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு  முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
    மூன்று தலை கொண்ட சுறாவின் அட்டகாசத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ள த்ரீ ஹெட்டெட் ஷார்க் அட்டாக் படத்தின் விமர்சனம்.
    கடலுக்கு மேல் கட்டப்பட்ட ஆராய்ச்சி கூடத்தில் விசித்திரமான கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்து, அவைகளின் வாழ்வாதாரம் கடலுக்கடியில் எப்படி இருக்கிறது? அவை எந்த சூழ்நிலையில் வாழ்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

    இவர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கும்போதே 3 தலை கொண்ட சுறா ஒன்று இவர்களது ஆராய்ச்சிக் கூடத்தை தாக்குகிறது. இதனால், அங்கிருந்து அனைவரும் தப்பித்துப் போக நினைக்கிறார்கள். அந்த சுறாவின் தாக்குதலில் ஆராய்ச்சி கூடம் அழிந்துபோகவே, அங்கிருந்து அனைவரும் ஒரு படகு மூலம் தப்பித்து செல்கிறார்கள்.



    செல்லும் வழியில் இவர்கள் ஒரு உல்லாச படகை பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று உதவி கேட்கலாம் என்கிற பட்சத்தில் 3 தலை கொண்ட அந்த சுறா உல்லாச படகை தாக்கி, அதில் பயணம் செய்பவர்களை கொல்கிறது. இதில் சில பேர் காயத்துடன் தப்பிக்கிறார்கள்.

    இதற்குள், ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்தவர்களும் அந்த உல்லாச படகை அடைகிறார்கள். காயமடைந்தவர்களையும் காப்பாற்றுகிறார்கள். மறுபடியும் அந்த சுறா உல்லாச படகை தாக்கி மற்றவர்களையும் கொன்று சாப்பிட துடிக்கிறது. இறுதியில், அந்த சுறாவிடமிருந்து அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    இரண்டு தலை சுறாவின் அட்டகாசத்தை கண்டுகளித்த வரிசையில் தற்போது மூன்று தலை கொண்ட சுறாவை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே. மூன்று தலை கொண்ட சுறாவை காட்சிப்படுத்தியதில் கிராபிக்ஸ் நன்றாகவே தெரிகிறது. அதேபோல், படத்தில் லாஜிக் இல்லாத சில சம்பவங்களும் இடம் பெற்றிருப்பதால் ஹாலிவுட் தரத்திற்கு இதை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.



    ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து தப்பிக்கும் சமயத்தில் தூரத்தில் நிற்கும் படகை பிடிப்பதற்காக கடலுக்குள் இறங்கி நடக்கும் ஒவ்வொருவரும் சுறாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயத்துடனே செல்லும் காட்சிகளில் எல்லாம் நமக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது. படத்தில் ஆரம்பத்தில் மூன்று தலை சுறா கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தலைக்கு ஒருவரை கடித்து திங்கும் காட்சிகளில் இயக்குனரின் கற்பனையை பாராட்டியே ஆகவேண்டும்.

    மொத்தத்தில் ‘த்ரி ஹெட்டெட் ஷார்க் அட்டாக்’ ரசிக்கலாம்.
    தமிழில் கிடைத்து வரும் தொடர் வாய்ப்பின் காரணமாக நடிகை நிக்கி கல்ராணி சென்னையில் வீடுவாங்கி குடியேறி இருக்கிறார்.
    ‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஆதியுடன் ஜோடி சேர்ந்த ‘மரகதநாணயம்’ ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து ‘நெருப்புடா’, ‘கீ’, ‘ஹரஹரமகா தேவகி’, ‘பக்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    வேறு சில தமிழ் படங்களுக்கும் கதை கேட்டு வரு கிறார். தொடர்ந்து தமிழ் படங்கள் வருகின்றன. நல்ல கதைகளும் அமைகின்றன. இனி வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, சென்னையில் புதிய வீடு வாங்கி குடியேறிவிட்டார்.
    சுந்தர்.சி இயக்கவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் சுருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்க இருக்கின்றனர்.   இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இளவரசியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் அந்த கதாபாத்திரத்திற்காக லண்டனில் வாள் பயிற்சியும் பெற்றார்.

    இந்நிலையில், படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகியதாக தகவல் வந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் அதனை உறுதி செய்தது. கதையின் முழு விவரத்தை தெரிவிக்கவில்லை. கால்ஷீட் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி, இந்த படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகி விட்டதாக தகவல் வெளியானது.



    இந்நிலையில், சுருதிஹாசன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க, முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுருதி விலகியதை அடுத்து, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2 வருடங்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் படத்தில் நடிக்க நயன்தாரா யோசித்து வருகிறாராம்.

    இதையடுத்து படக்குழு தற்போது ஹன்சிகாவிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் ஹன்சிகா நடிப்பதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    துருவ நட்சத்திரம் படத்திற்காக 4 நாடுகளில் 22 நாட்கள் படமாக்கவிருப்பதாக புதிய செய்திகள் வெளிவந்துள்ளது.
    விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் ‘துருவ நட்சத்திரம்’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 22 நாட்கள் 4 நாடுகளில் இந்த படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

    பல்கேரியா, ஸ்லோவேனியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான அபுதாபி ஆகியவற்றில் நடைபெறவிருக்கிறதாம். ஏற்கெனவே, இப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்த முக்கியமான 12 கதாபாத்திரங்களையும் உள்ளடக்கிய காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்கவுள்ளார்களாம்.



    இந்த படத்தில் 12 கதாபாத்திரங்களையும் தற்போதுதான் முதன்முறையாக படமாக்கவிருக்கிறார்களாம். பல்கேரியாவில் விக்ரம் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

    இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராதிகா, சதீஷ், வம்சி, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா. கே.பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து சுதா தற்போது சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், சுதாவிடம் சமீபத்தில் சூர்யா கதை ஒன்றை கேட்டதாகவும், அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.



    இதற்கிடையில், சிவகார்த்திகேயனிடமும் சுதா ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்ததாக சுதா யாரை வைத்து இயக்கப் போகிறார் என்பது அவர் வாய் திறந்து சொன்னால்தான் இதுகுறித்த உண்மையான தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது. 
    மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக கோலிவுட் செய்திகள் வெளியாகியுள்ளது.
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் ’வீரம்’ வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அஜித் சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபீசில் மெகா ஹிட் அடித்தது.

    இதையடுத்து, அஜித் தனது அடுத்த படத்தையும் சிவாவையே இயக்க வாய்ப்பு வழங்கினார். அதன்படி, தற்போது அஜித்-சிவா கூட்டணியில் மூன்றாவது படமாக ‘வேதாளம்’ உருவாகியுள்ளது. இவர்களது கூட்டணியில் உருவான முதல் இரண்டு படங்களைப் போலவே இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    இந்நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘வேதாளம்’ படம் வெளியான சமயத்தில் சிவாவின் மேக்கிங் ஸ்டைல் பிடித்திருப்பதாலேயே ‘விவேகம்’ படத்தை இயக்க சிவாவுக்கு அஜித் வாய்ப்பு வழங்கியதாக கூறப்பட்டது.

    ஆனால், ரசிகர்கள் மத்தியில் அஜித்-சிவா கூட்டணி ரொம்பவும் போரடித்துவிட்டதாகவே கருதப்படுகிறது. அஜித் வேறொரு இயக்குனருடன் இணைந்து புதிய பாணியில் நடிக்கவே அவரது ரசிகர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அஜித்-சிவா இணையும் அந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
    நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்த ரஜினிகாந்த் பாதியில் அதை முடித்து விட்டு மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். தாராவி பகுதியில் முஸ்லிம் குல்லா, கருப்பு வேட்டி, சட்டை அணிந்து தாதாவாக நகரை வலம்வருவது, குடிசை மக்களிடம் குறைகளை கேட்பது, வில்லன்களை முறைத்துக்கொண்டு திரிவது, மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து பயணிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கினார்.

    ரஜினிகாந்தை காண ஏராளமான ரசிகர்கள் கூடியதால் படப்பிடிப்புக்கு இடையூறுகள் ஏற்பட்டபோதும் பாதுகாவலர்களை நிறுத்தி முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். பின்னர் ரஜினிகாந்த் சென்னை திரும்பி சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு கடந்த வாரம் மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.



    கதாநாயகி ஹூமா குரேஷியுடன் அவர் நடித்த காட்சிகளும், வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன. 15 மாவட்ட ரசிகர்களுடன் சந்திப்பு, அவர்களுடன் புகைப்படம் எடுத்தல், ஒரு மாதம் காலா படப்பிடிப்பில் பங்கேற்றது என்று ஓய்வின்றி பணிகளில் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பை முடித்து விட்டு நேற்று இரவு திடீரென்று மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்கிறார். அப்போது மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறார்.

    பரிசோதனையை முடித்து விட்டு அடுத்த மாதம் சென்னை திரும்பி பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடக்கும் காலா படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார். ஏற்கனவே கடந்த வருடம் கபாலி படத்தை முடித்து விட்டு அமெரிக்கா சென்று ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்து ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மோசடி வழக்கில் கைதான நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் டெல்லியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் வங்கியில் ரூ.500 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.10 கோடி கமிஷன் பெற்றதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி கோர்ட்டில் ஆஜராகாததால் கடந்த மார்ச் மாதம் மீண்டும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.



    இந்த நிலையில், பெங்களூரு தொழில்அதிபர் மன்சூர் ஆலம், அவருடைய தம்பி சாஜத் வாகப் ஆகியோருக்கு வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடியை ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் மோசடி செய்ததாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவானது.

    இதுதொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீசார் டெல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று அவரை கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை பெங்களூரு 4-வது கூடுதல் முதன்மை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.

    அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.

    இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.

    அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!

    அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் "ஒரு கை ஓசை'' (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

    இப்படி, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை'' என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் "புதிய பாதை''); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: "சிகரம்.''

    சாருசித்ரா சீனுவாசன், "தீஸ்ரி மஞ்ஜில்'' என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

    படம் முடிந்ததும், "இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.

    சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.

    என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.

    கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

    பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்'' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.

    நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்'' என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.

    நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்' அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.

    படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்'' என்றேன். "சரி'' என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.

    திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!'' என்றார்.

    "அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!'' என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.

    படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.

    பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாïர் போய் வரலாம்'' என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!'' என்று கூறிவிட்டேன்.

    "காதல் ஓவியம்'' படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.

    "பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்'' என்றேன்.

    "உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!'' என்றார்.

    அதற்கு நான், "யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் "ஜெகன்மோகினி'' படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்'' என்றேன்.

    ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

    ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா.'' படம் ஓடவில்லை.

    "அலைகள் ஓய்வதில்லை'' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, "அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது'' என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.

    நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.

    அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!''

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

    ×