search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traveling"

    • காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
    • கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ,திருவோணம், நம்பிவயல், ஊரணிபுரம், கரம்பக்குடி, உள்ளிட்ட பகுதியிலிருந்து தினந்தோறும் கல்லூரி, மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகள், கல்லாக்கோட்டை அரசு கல்லூரி, செவந்தான்பட்டி கல்லூரிகளில் படிப்பதற்கு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரி செல்ல மற்றும் மாலை வீடு திரும்பும் நேரத்தில் மாணவர்கள் கூட்டம் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் உள்ளதால் பஸ் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    மேலும் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    இதனால் அவர்கள் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.எனவே பட்டுக்கோட்டையில் இருந்து நம்பிவயல், திருவோணம், ஊரணிபுரம், வழியாக கந்தர்வகோட்டைக்கு, மற்றும் திருவோணத்தில் இருந்து ஒரத்தநாடு கல்லூரிக்கு மாணவ மாணவிகள் செல்ல காலை மாலை நேரங்களில்

    கூடுதலாக பேருந்து இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

    கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்துக்கு சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Fishermanboat

    கொச்சி:

    கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றது.

    மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளத்தனமாக பயணம் செய்வது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதியில் இருந்து 70 பைகள் மீட்கப்பட்டன. அந்த பைகளில் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன.

    மேலும் 20 அடையாள ஆவணங்களும் அந்த பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. அதை வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பிரபு தண்டபாணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

    மீன்பிடி படகில் கள்ளத்தனமாக செல்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. டெல்லியைச் சேர்ந்தவர்களும் அந்த படகில் செல்வதாக கூறப்படுகிறது. 100 முதல் 200 பேர் வரை அந்த படகில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பெண்கள், குழந்தைகளும் அந்த படகில் இருக்கிறார்கள். 12-ந்தேதி இரவு புறப்பட்ட அந்த படகு நடுக்கடலுக்கு சென்றது. அதன் பிறகு அந்த படகு மாயமாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த படகில் கள்ளத்தனமாக செல்பவர்கள் நியூசிலாந்து நாட்டை நோக்கி செல்வதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து நியூசிலாந்துக்கு 7 ஆயிரம் மைல்கள் கடல் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணப்பாதை ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் அந்த கடல் மார்க்கத்தில் கடுமையான சூறாவளிகளும், கடல் கொந்தளிப்பும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா இடையே அந்த படகு கடும் கடல் கொந்தளிப்பை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த படகில் செல்லும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.  #Fishermanboat

    ×