என் மலர்tooltip icon
    • இந்தியா- நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி 7 மணிக்கு தொடங்குகிறது.
    • மதியம் 1 மணியில் இருந்தே ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா- நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    சொந்த மைதானத்தில் என்பதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நியூசிலாந்தும் நல்ல போட்டி கொடுக்க தயாராக உள்ளது. இதனால் போட்டி மிகவும் சுவாரஸ்சியமாகவும், விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும்.

    இந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம். இப்போட்டியை காண டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் மைதானத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். மதியம் 1 மணியில் இருந்து அவர்கள் ஸ்டேடியம் முன் குவியத் தொடங்கியுள்ளனர்.

    • சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

    இலவசம்.. மலிவு விலையில் பொருட்கள் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் சிரமத்தை தான் தருகின்றன. இதுபோன்று வெளியான ஒரு அறிவிப்பால் திரண்ட மக்கள் கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் கோழிக்கோடு வைக்கம் முகமது பஷீர் சாலையில் ஒரு செருப்பு கடை திறப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வந்தால் சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காலை 10 மணிக்கு திறப்பு விழாவின்போது காலணிகள் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் வெளியான இந்த அறிவிப்பை பார்த்து இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர்.

    கடை திறந்தவுடன், சலுகையை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் கடைக்குள் நுழைய போட்டியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாகி நிலைமை மோசமடைவதை கண்ட கடை உரிமையாளரே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அதன்பிறகே கூட்டம் கலைந்தது. இந்த சம்பவத்தின்போது ஓடிய பலரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை உருவாக்கியதற்காகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததற்காகவும் கடைக்காரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிராக 16-வது ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார் பும்ரா.
    • 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. இந்தியா 253 ரன்கள் எடுத்திருந்த போதிலும், இங்கிலாந்தை இலக்கை நெருங்கி வந்து 7 ரன்னில் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

    இந்தியாவின் வெற்றிக்கு பும்ராவின் பந்து வீச்சு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவர் 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அதிலும், 16-வது ஓவரில் 8 ரன்களும், 18-வது ஓவரில் 6 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முக்கியமான நேரத்தில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது இங்கிலாந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இதனால்தான் ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூட, இந்த விருதுக்கு பும்ரா தகுதியானவர் எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் நான் பும்ராவை பற்றி விவரிப்பது என்றால், அவரை ரோபா அல்லது இந்தியாவின் பொக்கிசம் என்பேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • வெயில் காலம் என்பதால் காட்டுப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் போன்றவை காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளது.
    • காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து வலம் வந்த காட்சி தற்போது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அடர்ந்த காடுகளையும், மலைப்பகுதிகளையும் கொண்டது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், மான், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    மாநில கர்நாடக வனப்பகுதியும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியும் ஒட்டியிருப்பதால் கர்நாடகமாநிலத்தில் இருந்து காட்டு யானைகள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி, தளி, அஞ்செட்டி வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    தற்போது வெயில் காலம் என்பதால் காட்டுப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் போன்றவை காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளது. காடுகளில் செடிகள், கொடிகள், மரங்கள் காய்ந்து விட்டதாலும், குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் தற்போது காட்டு யானைகள். நகருக்குள் வரும் நிலை உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தளி அருகே உள்ள கும்மலாபுரம் கிராமத்தில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து வலம் வந்த காட்சி தற்போது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டு விலங்குகள் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு புகாத வண்ணம் வனப்பகுதிகளில் போதிய அளவு, உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் மற்றும் நகர் பகுதிக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவதை தடுக்க, தேவர்பெட்டா முதல் முத்தியாலு, மடுவு ஜீரோ பாய்ண்ட் வரை மின்வேலி அமைத்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யவில்லை.
    • அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தரவில்லை.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யாமலும், அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும், வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    அந்த வகையில், மதுரை மாநகராட்சி நிர்வாகப் பதவிகளில் இருந்த ஆளும் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து, திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விடியா திமுக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

    மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆகியும், அப்பதவிகளுக்கு இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், குற்றம் இழைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகின்ற வியாழக்கிழமை (12.3.2026) காலை 10 மணியளவில் `முனிச் சாலை, தினமணி தியேட்டர் அருகில்', அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஏ.ஏ. ராஜன் செல்லப்பா முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற இன்னாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு; வியாபாரிகள்,

    பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
    • சாம்ராட் சவுத்ரி அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.

    அண்மையில் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நிதிஷ் குமார் அறிவித்து, மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு என்டிஏ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பீகாரின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) உடன் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இன்று (மார்ச் 8) பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

    50 வயதான நிஷாந்த் குமார், ஜே.டி.யு கட்சியின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா முன்னிலையில் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது மத்திய அமைச்சர் லாலன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

    நிதிஷ் குமார் தனது குடும்பத்தினரை இதுவரை அரசியலில் இருந்து தள்ளியே வைத்திருந்த நிலையில், தற்போது நிஷாந்த் குமாரின் வருகை ஜே.டி.யு கட்சியின் அடுத்தகட்ட தலைமை மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

    அதேநேரம் பீகார் துணை முதல்வராக நிஷாந்த் குமார் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேநேரம் தற்போது பீகார் துணை முதல்வராக உள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கு நேர்காணல்.
    • சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் முதல் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 27 காவல்நிலையச் சாவுகள் நடந்துள்ளன.
    • திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் கைது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித உயிர்களும், மனித உரிமைகளுக்கும் கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் திமுக அரசும், காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    மானாமதுரையில் கடந்த 6-ம் தேதி இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஆகாஷ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் கால் முறிந்த நிலையில் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால், வழக்கம்போலவே காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடும்போது பாலத்திலிருந்து விழுந்து கால் முறிந்து விட்டதாக காவல்துறை கூறியது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நன்றாக இருந்த ஆகாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக காவல்துறை சார்பில் கதை எழுதப்படுகிறது.

    ஆனால், ஆகாஷ் கைது செய்யப்பட்டது முதல் உயிரிழக்கும் வரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லப்படவில்லை என்றும், அவரை ரகசிய இடத்தில் வைத்து கொடுமைப்படுத்தி காவல்துறையினர் படுகொலை செய்து விட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல்துறையினருக்கு எதிராக ஆகாஷ் உறவினர்கள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தால் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கத் திறனற்ற அரசும், காவல்துறையும் அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படும் போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக கைதிகளை சுட்டுக்கொல்வது, காலை முறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வழக்குகளை முறையாக விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு பதிலாக கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் போக்கு திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் மடப்புரம் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது மானாமதுரையில் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆகாஷ் சித்திரவதைக் கொலைக்கு காரணமான காவல்துறையினர் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    டிடிவி தினகரன் கண்டனம்

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ×