search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop owner"

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சி விளக்கடி கோவில் தெரு பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    இதில், 150 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ
    • இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.

    3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய செல்போனில் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் சத்யம் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து ராஜேந்திரன், அவரது மனைவி தேன்மொழி ஆகியோரும் சுபஸ்ரீயுடன் தொடர்பு கொண்டு அடுத்தடுத்து பேசியுள்ளனர், இதனை நம்பிய சுபஸ்ரீ ரூ.15 லட்சம் அவரது வங்கி கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார்.

    ஆனால், அவர்கள் கூறியது போல எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பவில்லை. அவர்கள் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சுபஸ்ரீ பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் சத்யம், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.

    • குடி போதையில் வந்த கும்பல் உணவு சரியில்லை என கூறி சாப்பாடு தட்டை வீசி தகராறு செய்துள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் (வயது 37). இவர் மில்லர் பஸ் நிறுத்தம் அருகே தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த கடையில் அவருக்கு உதவியாக அவரது சகோதரர் இதயத்துல்லா (35) என்பவரும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தள்ளுவண்டி கடையில் ஏராளமானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்தது.

    குடி போதையில் வந்த கும்பல் சுல்தான் மற்றும் இதயத்துல்லாவிடம் உணவு சரியில்லை என கூறி சாப்பாடு தட்டை வீசி தகராறு செய்துள்ளனர். இதனை சுல்தான் மற்றும் இதயதுல்லா ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுல்தான் மற்றும் இதயத்துல்லா இருவரையும் கத்தியால் குத்தியும், வெட்டியும் அடித்து உதைத்து தாக்கவும் செய்துள்ளனர். இதனால் வலியால் அவர்கள் அலறி துடித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அதற்குள் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றது.

    படுகாயமடைந்த சுல்தான் மற்றும் இதயதுல்லா ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் குறித்து சுல்தான் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர்
    • போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர் எனவும், இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் தங்குதடையின்றி சாணி பவுடர் கிடைப்பது தான் எனவும் புகார்கள் வந்தன.

    இதனையடுத்து நேற்று சாணி பவுடர் விற்கும் கடைகளில் சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சுல்தான்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மளிகைக் கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் இருப்பது தெரியவந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்து கடையில் இருந்த 10 பாக்கெட் பவுடரை பறிமுதல் செய்தனர்.

    ×