search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewels stolen"

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சி விளக்கடி கோவில் தெரு பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    இதில், 150 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி.
    • சுப்பையா நேற்று விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்று விட்டார். அவரது மனைவி நேற்று மதியம் வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி.

    சுப்பையா நேற்று விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்று விட்டார். அவரது மனைவி நேற்று மதியம் வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் பின்பக்க கதவை பூட்ட அவர் மறந்துவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த வளையல், செயின், கை செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். நகையின் மதிப்பு சுமார் ரூ.6லட்சம் என்று கூறப்படுகிறது.

    சிறிது நேரம் கழித்து கிருஷ்ணவேணி மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகளையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ண வேணி நகைகள் திருடப்பட்டி ருப்பது குறித்து சுப்பையா விடம் தெரிவித்து ள்ளார். உடனே வயலில் இருந்து வந்த சுப்பையா மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதுதொட ர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி பட்டப்பகலில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கிருஷ்ணவேணி வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய ஒரு மணி நேர இடைவெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • பாலகிருஷ்ணன் தனியார் பள்ளி ஆசிரியரராக வேலை பார்த்து வருகிறார்.
    • பீரோவில் வைத்திருந்த 1½ சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, எல்.இ.டி. டி.வி. ஆகியவை மாயமாகி இருந்தது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீவாரி வெற்றி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). தனியார் பள்ளி ஆசிரியர்.

    நேற்று காலை பாலகிருஷ்ணன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். அவரது மனைவி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 1½ சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, எல்.இ.டி. டி.வி. ஆகியவை மாயமாகி இருந்தது.

    இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் சென்று தங்க நகை மற்றும் டி.வி.யை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மேலும்,அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி அம்மன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.
    • சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார்

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.

    5 பவுன் நகை கொள்ளை

    இவர் சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார். அப்போது கல்லிடைக் குறிச்சி அருகே ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார்.

    பின்னர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு கிடந்த கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை கொள்ளை போயி ருந்தது.

    இது தொடர்பாக அவர் கல்லிடைக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி.காமி ராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் திரவியம் ஜெபக்குமாரை பின் தொடர்ந்து வருவது தெரியவந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தொழிலாளி.
    • நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மாசானசாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மாசானசாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    ×